நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம், தேசிய மருத்துவ ஆணையமும் வேண்டாம்- திருமாவளவன்

/files/detail1.png

நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம், தேசிய மருத்துவ ஆணையமும் வேண்டாம்- திருமாவளவன்

  • 0
  • 0

 

நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம், தேசிய மருத்துவ ஆணையமும் (NMC)வேண்டாம். இவற்றை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய அவர், “கல்வி தொடர்பான முடிவெடுக்கின்ற அதிகாரம் concurrent list என்கிற ஒத்திசைவு பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையை வரையறுப்பதாக இருந்தாலும் தேசிய மருத்துவ ஆணையத்தை (NMC)கட்டமைப்பதாக இருந்தாலும் மாநில அரசுகளின் இசைவைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு autocratic approach என்கிற எதேச்சதிகாரமான வகையில் இதைத் தீர்மானித்திருப்பது வரவேற்கத் தகுந்தது அல்ல. எனவே, இதை நான் எதிர்க்கிறேன். 

MCI என்பது (a professional body and elected body) மருத்துவர்களையும் மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட ஒரு அமைப்பாக அது இயங்கியது. ஆனால், அதைக் கலைத்துவிட்டு பெரும்பான்மையாக அந்த துறையோடு தொடர்பில்லாத அதிகாரிகளை நியமிக்கக்கூடிய வகையில் இதைக் கட்டமைப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு bureacrat body என்று சொல்லக்கூடிய வகையில் இது அமைந்திருக்கிறது. எனவே, இந்த மசோதாவை நான் விசிக சார்பில் எதிர்க்கிறேன்.

மாணவர்களுக்குக் கல்வியையும் மக்களுக்கு மருத்துவத்தையும் இலவசமாக வழங்குகிற அரசுதான் ஒரு சிறந்த அரசாக இருக்க முடியும். மருத்துவத்தையும் கல்வியையும் தனியார்மயமாக்குவது மக்கள் விரோத நடவடிக்கை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்போது இந்த ஆணையம் கல்வியைத் தனியார் மையப்படுத்துவதற்கும் ஊழலை மேலும் பெருக்குவதற்கும் வழிவகுக்கக் கூடிய வகையில்தான் அமைந்திருக்கிறது. கல்வியை மேம்படுத்துவதற்கு மருத்துவத்தை மேம்படுத்துவதற்கு இது எந்த வகையிலும் பயன்தராது.

நீட் தேர்வு வேண்டாம் என்று நாங்கள் மிகக்கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறோம். தமிழக அரசே இது தொடர்பான அறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறது. இதுவரையில் இது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. பள்ளிக் கல்வி பயனற்றது என்கிற வகையில் நீட் தேர்வு அமைந்திருக்கிறது. 12 ஆண்டுகள் படித்த மாணவர்கள் அந்த படிப்பால் எந்த பயனுமில்லை என்கிற வகையில் நீட் தேர்வு அமைந்திருக்கிறது. இப்போது நெக்ஸ்ட் (NEXT) என்கிற தேர்வு ஐந்தாண்டுக் காலம் படித்த மருத்துவ மாணவர்கள் அந்த தேர்வை எழுதினால் தான் அவர்கள் மருத்துவர்களாகப் பதிவு செய்ய முடியும் என்கிற ஒரு நிலையை ஏற்படுத்துவதன் மூலம் ஐந்தாண்டுக் காலம் அவர்கள் படித்த மருத்துவக் கல்வி பயனற்றது என்கிற நிலையை உருவாக்கியிருக்கிறது. 

எனவே, நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம், தேசிய மருத்துவ ஆணையமும் (NMC) வேண்டாம், இதை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும்” என்று பேசினார்.

Leave Comments

Comments (0)