117 மீனவப் படகுகளை  சேதப்படுத்திய கடற்படை

/files/detail1.png

117 மீனவப் படகுகளை  சேதப்படுத்திய கடற்படை

  • 0
  • 0

கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையால்  தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 165 படகுகளில் 48 படகுகள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் தமிழக மீனவர்களினால்  எல்லை கடந்து மீன் பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட மீனவப்படகுகளை இலங்கையின் நீதிமன்ற உத்தரவிற்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அரசின் கோரிக்கைக்கு அமைய குறித்த படகுகளை இலங்கை விடுவித்துள்ளது.  இந்தப்படகுகளை எடுத்துச்செல்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து மீனவ பிரதிநிதிகள் இலங்கைக்குச் சென்றிருந்தனர்.  இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த 165 படகுகளில் 48 படகுகள் மட்டுமே நல்ல நிலையில் இருந்துள்ளது. எனவே 48 படகுகளை மட்டும் தமிழ் நாட்டுக்கு மீட்டுக்கொண்டு  வந்துள்ளனர்.

அத்து மீறி மீன் பிடித்தல் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதோடு அவர்களின் படகுகளும் மீன்பிடி வலைகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்களின் போது இலங்கை கடற்படை வலைகள் மட்டும் படகுகளை சேதப்படுத்தி வருகின்றதாக பாதிப்படைந்த மீனவர்கள்  குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  பறிமுதல் செய்யப்பட்ட 165 படகுகளில் 117 படகுகளை இலங்கை கடற்படையால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)