அமரர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மறைவுக்கு யாழில் இரங்கல்

/files/detail1.png

அமரர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மறைவுக்கு யாழில் இரங்கல்

  • 0
  • 0

ஈழத்தமிழருக்கு மிகவும் குரல் குடுத்து ஆதரவாக செயற்ப்பட்டு வந்த இந்திய பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் அமரர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மறைவு ஈழத் தமிழர்களை மிகப்பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என M.K சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பான ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஈழத் தமிழர் விடுதலைக் கழகத்தின் தவிசாளர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான M.K சிவாஜிலிங்கம், மறைந்த பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை உலகுக்கு வெளிக் கொண்டு வந்தவர்.  அத்துடன் போராட்டத்திற்கு ஆதரவாக தொடர்சியாக குரல் குடுத்து வந்த சிறந்த மனிதர்.

மேலும் இவரது இழப்பால் துயர் உற்றுள்ள அவரது கும்பத்தினர் மற்றும் மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ்,கடந்த 29ம் திகதி தனது 88 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)