தமிழ் ஸ்டுடியோவின் மாதாந்திர திரையிடல் -விழுப்புரம்

/files/detail1.png

தமிழ் ஸ்டுடியோவின் மாதாந்திர திரையிடல் -விழுப்புரம்

  • 0
  • 0

 

உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் தேதி விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமா மையத்தில் `விசாரணை` திரைப்படம் திரையிடப்படுகிறது.

டிசம்பர் 10, உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமா மையத்தில் மாதாந்திர திரையிடலாக விசாரணை திரைப்படம் திரையிடப்படுகிறது. அரசு மற்றும் ஆதிக்க சக்திகள் சக மனிதன் மீது செலுத்தும் வன்முறை மனிதத்திற்கு எதிரானது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கான உரிமையைப் பெறுவதற்கு முழு சட்ட பாதுகாப்பை அண்ணல் அம்பேத்கர் வழங்கியுள்ளார். எனினும் மனித உரிமை என்பது நிகழ்காலத்தில் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. மனித உரிமைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நல்ல சினிமாவை பரவலாக கொண்டு சேர்க்கவும் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து பாடுபடும்.

விழுப்புரத்தில் பிராக்சிஸ் மையத்தில் நடைபெறும் இந்த திரையிடலுக்கு அனைவரும் வருகை புரிந்து ஆதரவு தரவேண்டும். அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

ஒருங்கிணைப்பு: தமிழ் ஸ்டுடியோ, மாலைப்பொழுதினிலே வாசகர் வட்டம், மற்றும் பிராக்ஸிஸ் படிப்பகம்.

கூகில் மேப்: https://www.google.com/maps/place/Praxis+Study+Hall/@11.9291455,79.4766703,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a53576d5178d059:0xbbf0ae90d3a0da9c!8m2!3d11.9291455!4d79.478859

தொடர்புக்கு 98406 44916, 9952534083

நேரம்: 08.12.2019, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு.

இடம்: பிராக்ஸிஸ் படிப்பகம், எல்லிசத்திரம் சாலை, VGP நகர், வழுதரெட்டி, Landmark:புதிய பேருந்து நிலையம் பின்புறம், விழுப்புரம்-605602.

Leave Comments

Comments (0)