மோடி மீண்டும் பிரதமராவது உலகத்திற்கே கெட்ட செய்தி - கார்டியன் பத்திரிக்கை 

/files/detail1.png

மோடி மீண்டும் பிரதமராவது உலகத்திற்கே கெட்ட செய்தி - கார்டியன் பத்திரிக்கை 

  • 0
  • 0

 

மோடி மீண்டும் பிரதமராவது உலகத்திற்கே கெட்ட செய்தி என்று கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், அந்த தேர்தலின் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியானது. அதில், 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் தகுதியை நரேந்திர மோடி பெற்றுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகள் துயர்மிகு ஆட்சியாக இருக்கும், அரசின் ஆதரவோடு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும், இயற்கை வளங்கள் சுரண்டப்படும் என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், பொய் பிரசாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கிவிட்டார் என்று கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மிகப் பெரிய தேர்தலில் நரேந்திர மோடி என்கிற தனி மனிதர் வெற்றிபெற்றுள்ளார். மோடி ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையிலிருந்தபோதும், அவர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே மோசமான செய்தி. இந்து தேசியவாதம் என்ற பெயரில், நாட்டை மோசமான பாதைக்கு அழைத்துச்செல்லும் இயக்கத்தின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி. இந்து உயர் சாதியினரின் ஆதிக்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு, வெறுப்பு அரசியல், மாநில அரசு அதிகாரங்களைக் கட்டுப்படுத்துதல் போன்றவை பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு. மோடியின் வெற்றியின் மூலம் சுமார் 20,000 இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் இருண்ட அரசியலிடம் இந்தியாவின் ஆன்மா தோற்றுவிட்டது.   பொய் தகவல்கள் மற்றும் பிரிவினைவாதத்தை வைத்து மோடி பிரசாரம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
 

Leave Comments

Comments (0)