எனக்கு நீ சரிசமமா ?
February 20, 2021 - selvamani T
February 26, 2021,6:52:47 PM
பிரனாயை ஆணவக் கொலை செய்த மாருதி ராவ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடம் உரையாற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனாய் குமார் (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மாருதி ராவ் என்பவரின் மகள் அம்ருதாவும் (21) பள்ளியில் படிக்கும்போதிருந்தே நண்பராகப் பழகிவந்தனர். பின்னர் அதுக் காதலாக மாற, அந்தக் காதலுக்கு அம்ருதாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார். பிரனாய் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாருதி ராவ்வின் எதிர்ப்பை மீறிக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அம்ருதாவும், பிரனாயும் ஹைதராபாத் சென்று திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த வருடம் செப்டம்பர் 13ஆம் தேதி 5 மாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் பிரனாய். பிரனாயின் தாயும் அவர்களுக்குத் துணையாக மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது மாருதி ராவ் கூலிப்படையை ஏவி பிரனாயின் தாய், மனைவி கண்முன்னரே பிரனாயை வெட்டி படுகொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே பிரனாய் உயிரிழந்தார். மாருதி ராவ் மற்றும் அவர் அமர்த்திய கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து பிரனாய் கொலையான 5 மாதங்களுக்குப் பிறகு அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மாருதி ராவ் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஜாமீன் கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் மாருதி ராவ் உள்ளிட்ட 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பிற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 07) பிரனாயை ஆணவக் கொலை செய்த மாருதி ராவ் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுள்ளார். இது அப்பகுதியில் சர்ச்சையை எற்படுதியிருகிறது.
இதுகுறித்து பிரனாயின் தந்தை பாலசாமி, “இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாருதி ராவ்-க்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. அந்த சம்பவத்தைப் பார்த்து நான் காயமடைந்தேன். இந்த வழக்கைத் திசைதிருப்ப மாருதி ராவ் முயற்சிக்கிறார். நாங்கள் காயமடைந்திருக்கிறோம். அவர் எந்த குற்றத்தையும் செய்யாததுபோல சுதந்திரமாகச் சுற்றி திரிவது எங்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது. நேற்று முன் தினம் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதை அவர் பயன்படுத்தி பொதுமக்களை அவருக்கு ஆதரவாக மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் எங்களுக்கு இன்னும் சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. வழக்கின் விசாரணை விரைவில் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments