மன்னார் மனித புதைகுழி -அமெரிக்கா செல்லவுள்ள ஆய்வுக்குழுவில் காணாமல் போனவர்களின் உறவினருக்கு அனுமதி

/files/detail1.png

மன்னார் மனித புதைகுழி -அமெரிக்கா செல்லவுள்ள ஆய்வுக்குழுவில் காணாமல் போனவர்களின் உறவினருக்கு அனுமதி

  • 0
  • 0

 

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்ய அமெரிக்கா செல்லவுள்ள   குழுவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள  அனுமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில்   மிகப்பெரிய மனித புதைகுழி ஒன்று கண்டறியப்பட்டு அகழ்வுப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

10அடி ஆழத்தில் இருந்து நாள்தோறும் மனித எச்சங்கள் வெளியில் எடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த எச்சங்கள் தற்போது எண்ணிக்கையில் 300 தாண்டியுள்ளன. எனினும் இன்னும் எச்சங்களை கண்டுப்பிடிக்கும் ஏதுக்கள் உள்ளன.

இந்தக்குழியில் இருந்து 12வயதுக்கு உட்பட்ட சிறுவர்களினது என்று கருதப்படும் 23 எச்சங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு கார்பன் பரிசோதனைக்காக எடுத்துச்செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக்காக செல்லவுள்ள குழுவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரையும்  இணைத்துக்கொள்ள  மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இலங்கைப்போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 60,000 ம் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)