மன்னார் மனித புதைகுழி – 304 எலும்புக்கூடுகள் மீட்பு

/files/detail1.png

மன்னார் மனித புதைகுழி – 304 எலும்புக்கூடுகள் மீட்பு

  • 0
  • 0

 

இலங்கையில் உள்ள  மன்னார் மாவட்டத்தில்  கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரையில் 304 எலும்புக்கூடுக் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட  குறித்த பகுதி, விடுதலைப்புலிகளுக்கும்  அரச படைகளுக்கும் யுத்தம் நடந்த காலப்பகுதியில்  அரச படைகளின்  கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது.

2009ஆம் ஆண்டு முடிந்த இலங்கை போரில் குறைந்தது 60,000 பேர் காணாமல் போயிருக்கலாம் என மனித உரிமை குழுக்கள்  அச்சம் தெரிவித்துள்ளன.  இந்நிலையில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட இடத்தை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என  அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இன்று வரையிலும் ஆகழ்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த புதைகுழியில் மனித எலும்புக்கூடுகளைத் தவிர, இறந்தவர்களின் எலும்புகளுடன் ஆபரணங்கள், உலோகத்துண்டுகளும் மீட்கப்பட்டு வருகின்றது. 130 நாட்களைக்கடந்து செல்லும் ஆகழ்வுப்பணிகளில், இதுவரையில், 300 எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதில்  294 எச்சங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட எலுப்புக்கூடுகள், அமெரிக்க மாநிலமான புளோரிடாவுக்கு வரும்  23ம் தேதி அனுப்பி வைக்கவுள்ளதாக கூறிய  சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்சே, அதுவரையில் இந்த எலும்புக்கூடுகள் நீதிமன்ற பாதுகாப்பில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த எலும்புக்கூடுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னரேதான் இறந்தவர்கள் யார், அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் எனத் தெரியவரும்.

முன்னதாக இந்த புதைகுழி குறித்து கருத்து தெரிவித்திருந்த கெலனிய பல்கலைக்கழகத்தின் தடயவியல் தொல்பொருள் நிபுணர் சோமதேவ  “என் அனுபவத்தில் இதுவரை தோண்டி எடுக்கப்பட்டதில் மிகப் பெரிய கல்லறை இதுதான். மனித எச்சங்களை தவிர்த்து, அங்கு பீங்கான், உலோக பொருட்களோடு, அங்கு இறந்தவர்களின் ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்புகள் சிதறிக் கிடக்கின்றன. மனித உடல்களை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை"  என்றார்.

தமிழ் சிறுபான்மையினர் அதிகமுள்ள மன்னார் பகுதியில், இலங்கை பாதுகாப்பு படை மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இரு தசாப்த போரின்போது, அங்கிருந்த நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என சமூக தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இலங்கை போர் காலத்தில் மன்னார் நகரம், பெரும்பாலும்  இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அதன் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அம்மாவட்டத்தின் பல இடங்களை விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தின. கொரூரமான போர்களுக்கு பிறகு, அந்த ஒட்டுமொத்த மாவட்டத்தையும் படையினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave Comments

Comments (0)