போதைப்பொருள் விவகாரம் அரச அதிகாரிகளை  சாடுகிறார் ஜனாதிபதி!

/files/detail1.png

போதைப்பொருள் விவகாரம் அரச அதிகாரிகளை  சாடுகிறார் ஜனாதிபதி!

  • 0
  • 0

இலங்கையில் போதைப்பொருள்  கடத்தல் மற்றும் பயன்பாடு விவகாரத்தில் அரச அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா குற்றம்சுமத்தியுள்ளார்.

 கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில் மாணவ சமூகம் பெரிதும் உள்வாங்கப்பட்டுள்ளது. தினம் கடல்மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொள் கடத்தி வந்த குற்றச்சாட்டில் இந்தியாவைச்சேர்ந்தவர்களும் விற்பனையில் அல்லது மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், ‘போதைப்பொருள் அற்ற நாடு’ என்ற தொனிப்பொருளை சாத்தியமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய  காவல்துறை அதிகாரிகளைக் கௌரவிக்கும் ஜனாதிபதி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி,

“போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வலுப்பெற்றுள்ளனர். அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், இதனுடன் தொடர்புபட்டுள்ளனர்.

சமூகத்தின் பிரமுகர்களே இவற்றுடன் தொடர்புபட்டுள்ளனர். இதனால் அதனை ஒடுக்குவதற்கு முன்னெடுத்த நடவடிக்கைளை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் இந்த நடவடிக்கைகள் தாமதமடைவதைத் தடுப்பதற்காக 2015ஆம் ஆண்டு முதல் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை, காவல்துறை, முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பாளர்களான நீங்களே முடிவுக்குக் கொண்டுவந்தீர்கள்.

அந்த யுத்தத்திற்கு இணையாகவுள்ள போதைப்பொருளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு நாம்  தெளிவுபடுத்த வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

Leave Comments

Comments (0)