இனவாதத்தை தூண்டும் மகிந்த அணி

/files/detail1.png

இனவாதத்தை தூண்டும் மகிந்த அணி

  • 0
  • 0

 

இலங்கையில் தொடர்ந்து இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக எதிர்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்சே அணியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்பினால் நாடு பிளவடையும் என மகிந்த ஆதரவு அணியினர் கூறுகின்றனர். இது முற்றிலும் பொய்யான கருத்து என்றும் இவ்வாறாக அவர்கள் இனவாதத்தை துாண்டுவதாகவும் கொழும்பு மாநகர மேஜர் ரோசிசேனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஆயத்தங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி முன்னெடுத்துள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியும் தனது நாடு பிளவடைவதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். அவ்வாறு இருக்கும் போது ஏன் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டும்.

அதையும் மீறி புதிய அரசியல் அமைப்பினால் நாடு பிளவடையும் எனக்கூறும் தரப்பினர் ஊடகவிவாதமொன்றை நடத்தலாம். தற்போது அரசமைப்பு தொடர்பான வரைவொன்றுகூட வரவில்லை.

இந்நிலையில் தேவையில்லாத இனவாதத்தை எதிரணியனர் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான இனவாத சிந்தனையினாலையே அவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கும் முன்கூட்டியே செல்ல முயற்சிக்கின்றனர் என  கொழும்பு மாநகர மேஜர் ரோசிசேனா குற்றம்சுமத்தியுள்ளார்.

முன்னதாக மகிந்த அணியினர், புதிய அரசியல்  அமைப்பு கொண்டுவரப்பட்டால் வடக்கு கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என எச்சரித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave Comments

Comments (0)