கடூழியச் சிறைத்தண்டனையில் சிக்க உள்ள மகிந்தவின் மைத்துனர்

/files/detail1.png

கடூழியச் சிறைத்தண்டனையில் சிக்க உள்ள மகிந்தவின் மைத்துனர்

  • 0
  • 0

மகிந்தவின் மைத்துனர்  ஜாலிய விக்ரமசூரியவுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் மஹிந்த ராஜபக்சேவின்  மைத்துனரும், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவருமான ஜாலிய விக்ரமசூரியா மீது மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மஹிந்த ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக தனது மைத்துனர் ஜாலிய விக்ரமசூரியாவை நியமித்திருந்தார். அமெரிக்க குடியுரிமையையும் கொண்டுள்ள இவர் அங்கு பதவியில் இருந்த காலத்தில் பணச்சலவை, நிதி மோசடி, மற்றும் குடிவரவுச் சட்டங்களை மீறியமை குறித்து அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பணச்சலவை சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும், நிதிமோசடி தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளும், கடந்த 2018 மே மாதம் அமெரிக்கா சென்ற போது குடிவரவுத் திணைக்களத்துக்கு தவறான வழங்கினார் என ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்குறித்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FPIஅதிகாரிகளின் நீண்ட புலனாய்வுக்குப் பின்னர் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணச்சலகை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படவும், அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave Comments

Comments (0)