ஸ்லோவோகியன் படம் - அருண்மொழி நினைவாக திரையிடல் மற்றும் இயக்குனருடன் கலந்துரையாடல்

/files/detail1.png

ஸ்லோவோகியன் படம் - அருண்மொழி நினைவாக திரையிடல் மற்றும் இயக்குனருடன் கலந்துரையாடல்

  • 0
  • 0

நாளை (டிசம்பர் 14) மாலை 6 மணிக்கு பியூர் சினிமாவில் சுயாதீன கலைஞர் அருண்மொழி இறுதியாக பணிபுரிந்த ஆவணப்படத்தை அவரது நினைவாகத் திரையிடுகிறோம்.

ஆவணப்படம் - Lonely Runners: Moving On! (OSAMELÍ BEŽCI. IDEME ĎALEJ!)

மார்டின் ரெப்கா | ஸ்லோவேக்கியன், தமிழ் | 82’

கதைச் சுருக்கம் – முன்னகரும் அந்தரி ஓட்டக்காரர்கள் ஒரு பயண-ஆவணப்படம். 1963-ல் தி லோன்லி ரன்னர்ஸ் என்கிற ஒரு குழுமத்தை மூன்று கவிஞர்கள் தொடங்கினர். 2019-ல் அம்மூவரும் சந்திப்பதன் வழியாகவும், அவர்கள் பயணிப்பதன் வழியாகவும் அவர்களுக்கிடையிலான நட்பையும் இன்னபிற விசயங்களையும் இப்படம் உணர்த்துகிறது.

இயக்குனர் மார்டின் ரெப்கா பிரடிஸ்லேவியாவில் உள்ள திரைப்பட கல்லூரியில் படித்தப்பின் இதுவரை 6 குறும்படங்கள் இயக்கியிருக்கிறார். அவரது முதல் முழுநீள படமான Return of the Storks 2007-ம் வருடத்திற்கான ஸ்லோவேக்கியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கார் அனுப்பல் ஆகும். Lonely Runners: Moving On! அவரது முதல் ஆவணப்படம்.

நண்பர்களே, திரைக்கலைஞர் அருண்மொழி இறுதியாக பணிபுரிந்த ஆவணப்படத்தை அவரது நினைவாகத் திரையிடுகிறோம். இப்படத்தின் திரையாக்கத்தில் பங்குபெற்றதைத் தாண்டி சுமார் 5 நிமிடங்கள் திரையிலும் தோன்றுகிறார். படத்தின் இயக்குனர் மார்டின் ரெப்காவும் திரையிடலில் பங்கேற்கிறார். திரையிடல் முடிந்தப் பின்னர், பார்வையாளர்கள் இந்த ஆவணப்படம், அருண்மொழியின் பங்களிப்பு, ஸ்லோவேக்கிய திரையுலகம் ஆகியவற்றைப்பற்றி இயக்குனரிடம் கேள்விகள் கேட்கலாம்.

சென்னை திரைப்பட விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அருண்மொழி போன்ற கலைஞர்ளை எல்லா வகையிலும் நாம் பெருமைப்படுத்த வேண்டும். எனவே தவறாமல் திரையிடலுக்கு வந்துவிடுங்கள். தவிற ஸ்லோவோகியன் இயக்குநர் ஒருவரை சென்னை திரைப்பட விழாவில் கூட பார்க்க முடியாது. இது முக்கியமான வாய்ப்பு, தவறவிடாதீர்கள்.

நாள்: 14.12.2019, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42

Leave Comments

Comments (0)