ஆபத்தின் பிடியில் ஆஃப்கனைச் சேர்ந்த “லிட்டில் மெஸ்ஸி”!

/files/detail1.png

ஆபத்தின் பிடியில் ஆஃப்கனைச் சேர்ந்த “லிட்டில் மெஸ்ஸி”!

  • 0
  • 0


கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் மீது தான் கொண்ட அன்பால் உலகம் முழுவதையும் தன் பக்கம் திருப்பினான் ஆஃப்கனைச் சேர்ந்த சிறுவன் முர்தாசா அஹமதி. மெஸ்ஸியை நேரில் சந்திக்க வேண்டும் என்ற அவனது கனவும் அந்த வருடமே (2016) நிறைவேறியது. ஆனால் இன்றோ போரினால் ஆஃப்கனில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்ற நிலையில், அவனது வாழ்க்கை பெரும் ஆபத்தில் உள்ளது..

இதுவரை பாதுகாப்பாக இருந்த பகுதிகளை தற்போது தாலிபான்கள் தாக்கி வருவதால், ஆஃப்கனின் தென் கிழக்கு காஸ்னி மாகானத்தில் உள்ள தங்கள் வீடுகளை முர்தாசாவும் அவனது குடும்பமும் கைவிட்டுவிட்டு ஆயிரக்கணக்கான மக்களோடு சேர்ந்து வேறு இடத்திற்கு தப்பிச்சென்றுள்ளனர். இப்போது முர்தாசா குடும்பமும் மற்ற குடும்பங்களை போல காபூலுக்குள் செல்ல போராடி வருகிறது. மேலும், தங்கள் பிரபலமான மகனை தாலிபான்கள் கொன்று விடுவார்களோ என்ற பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஏனென்றால், சிறுவன் முர்தாசா தங்கள் கையில் கிடைத்தால் துண்டு துண்டாக வெட்டி கொன்று விடுவோம் என தாலிபான்கள் கூறியுள்ளனர்.

நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலான கிளிந்த பிளாஸ்டிக் பையை கொண்டு செய்தும், அதன் பின்னால் பேனாவால் எழுதப்பட்ட மெஸ்ஸியின் பேரும் 10-ம் எண்ணும் கொண்ட ஜெர்சியை அணிந்த முர்தாசாவின் புகைப்படம் 2016-ம் ஆண்டு உலகம் முழுவதும் ஊடகத்திலும் சமூக வலைதளத்திலும் பிரபலமானது. இதை அறிந்த மெஸ்ஸி, அந்த ஆண்டு கத்தாரில் வைத்து பார்சிலோனோ அணி விளையாடியபோது, முர்தாசாவை சந்தித்து அவனது கையை பிடித்து மைதானத்திற்குள் அழைத்துச் சென்றார். UNICEF-ன் நல்லெண்ண தூதரான மெஸ்ஸி, தன் சின்னஞ்சிறிய ரசிகருக்கு தன் கையெழுத்திட்ட ஜெர்சியும் கால்பந்தையும் அளித்தார். ஆனால் இந்த மகிழ்ச்சியான தருணம் கொஞ்ச நாளே நீடித்தது.

தாக்குதலில் இருந்து தப்பி வந்த முர்தாசா குடும்பத்தினர், மற்றொரு வறிய நிலையிலுள்ள குடும்பத்தோடு நெருக்கடியான அறையில் வாடகைக்கு இருந்து வருகிறார்கள். “குண்டு சத்தம் கேட்டதும் எதையும் எடுக்காமல் எங்கள் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு தப்பி வந்தோம்” என்கிறார் முர்தாசாவின் தாயார் ஷாஃபியா. பேசும்போது கூட அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என தன் முகத்தை பாதி மறைத்துக் கொள்கிறார்.
இவரது குடும்பம், ஷைதி பெரும்பாண்மையாக உள்ள ஹஸாரா இனக்குழுவை சேர்ந்தவர்களாவர். நவம்பர் மாதம் நடந்த தாக்குதலில் இவர்கள் சன்னி தாலிபானால் குறி வைக்கப்பட்டனர். இதுவரை 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளன என ஐநா சபை கூறியுள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கனக்கான மக்கள், ரானுவ வீர்ர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்படுள்ளனர்.

தாலிபான் ஆட்சியில் (1996-2011) அரிதாகவே விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் காபூல் மைதானம் கல் எறிவதற்கும் கொலை செய்வதற்குமான இடமாகவே திகழ்ந்தது. நாங்கள் தப்பித்து வரும்போது, எங்கள் மகனை யாரும் அடையளம் கண்டுவிடக்கூடாது என அவனை துண்டை வைத்து மறைத்தே கொண்டு வந்தோம் என முர்தாசாவின் தாயார் ஷஃபியா கூறுகிறார். முதலில் மசூதி ஒன்றில் தஞ்சம் அடைந்த குடும்பத்தினர், ஆறு நாட்களுக்குப் பிறகு காபூல் சென்றனர். தப்பி வரும்போது அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்த பொருட்களில் மெஸ்ஸி கையெழுத்திட்ட ஜெர்சியும் கால்பந்தும் அடங்கும்.

ஆஃப்கன் பாதுகாப்பு படைகள் தலிபான்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தி சில பகுதிகளை மீட்டாலும் இனி பாதுகாப்பாக அங்கே இருக்க முடியாது என முர்தாசாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர். தாலிபான்கள் மறுபடியும் வரும் ஆபத்து நிறைய உள்ளது. ஆகையால் அங்கே திரும்ப செல்ல முடியாது. முர்தாசாவின் புகழால் மேலும் எங்களுக்கு அதிகமான கவனம் கிடைத்துள்ளதால் இன்னும் அதிகமான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் குடும்பத்தினர். 

இதற்கிடையில், சிறுவன் முர்தாசா கூறுகையில், “மெஸ்ஸி தந்த ஜெர்சியும் கால்பந்தும் குறித்தே நினைவாக உள்ளது. அது எனக்கு மறுபடியும் வேண்டும். அப்போதுதான் என்னால் விளையாட முடியும். நான் மெஸ்ஸியை சந்தித்தபோது அவரிடம் ‘சலாம்’ கூறினேன். எப்படி இருக்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர், நன்றி, நான் நலமாக இருக்கிறேன் என்றார். அவரோடு மைதானத்திற்கு சென்ற நான், அவர் விளையாடியதை அருகிலிருந்து பார்த்தேன்” என்று அப்பாவியாக கூறுகிறான். 

தமிழில்: V. கோபி 

நன்றி: www.thehindu.com

Leave Comments

Comments (0)