Learn from Masters - ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடல் - Coen Brothers படங்கள் திரையிடல்

/files/detail1.png

Learn from Masters - ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடல் - Coen Brothers படங்கள் திரையிடல்

  • 0
  • 0

Learn from Masters-ஆய்வு அடிப்படையிலான தொடர் திரையிடலில், எதிர்வரும் 30ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை தமிழ் ஸ்டுடியோவில், இயக்குனர்கள் கோயன் பிரதர்சின் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. 

திரைக்கதைக்காக பெரிதும் பேசப்படும் மிக முக்கிய இயக்குனர்களான கோயன் பிரதர்ஸ் திரைப்படங்களைப் பார்ப்பதன் வாயிலாக ஒரு சினிமாவிற்கான திரைக்கதை உருவாக்கத்தில் நாமும் மறைமுகமாகப் பங்கேற்கிறோம். கோயன் பிரதர்சின் பல்வேறு வகைப்பட்ட சினிமாக்களில் முக்கியமான சிலவற்றை உங்களுக்காகத் தேர்ந்தெடுத்துத் திரையிடுகிறோம். 

படங்களைப் பார்த்து சினிமா உருவாக்கத்தைக் கற்றுக்கொள்வதற்கான படங்களைத் தமிழ் ஸ்டுடியோ உங்களுக்காகத் தேடி தேடி திரையிடுகிறது. கிட்டத்தட்ட இது சினிமா கல்விக்குச் சமம். இந்த படங்கள் யாவும் பரிச்சார்த்த முயற்சியில் சினிமா உருவாக்கத்திற்கு உதவும். தமிழ் ஸ்டுடியோவின் இத்தனை ஆண்டுக்கால பயணத்தில் திரைப்படம் எடுக்க நமக்கு உதவும் படங்களின் பட்டியல் தயார் செய்து அதனை உங்களுக்காக பொது திரையிடலாக நடத்துகிறோம். இந்த Learn From Masters தொடர் திரையிடலில் தொடர்ச்சியாகத் தமிழ் ஸ்டுடியோ திரையிடும் அனைத்துப்படங்களையும் தவறாது பாருங்கள். திரைப்பட உருவாக்கம், ஒரு படத்தை எப்படி எடுப்பது போன்ற உங்கள் ஐயங்களுக்கு விடை கிடைக்கும்.

இயக்கம், ஒளிப்பதிவு, இசை, ஒலியமைப்பு, படத்தொகுப்பு, திரைக்கதை என ஒவ்வொரு பிரிவையும் நீங்கள் கற்றுக்கொள்ள ஏதுவாக இந்த திரையிடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த இயக்குநர்களின் படங்களை எந்த வரிசையில் பார்க்க வேண்டும், என்னென்ன படங்களைப் பார்க்க வேண்டும், போன்ற பலவற்றையும் தமிழ் ஸ்டுடியோவின் சினிமா கல்வி ரீதியிலான ஆய்வின் அடிப்படையில் இந்த திரையிடல் நடைபெறுகிறது. ஆனால் மொத்தமாக அத்துனை படங்களையும் பார்க்க வேண்டும். 50 நண்பர்கள் மட்டுமே வசதியாக அமர்ந்து பார்க்க இயலும். எனவே சனிக்கிழமை காலை 9.30 மணிக்குள்ளாக வரும் நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி. முதலில் வந்து உங்கள் இருக்கையை உறுதி செய்யுங்கள். 10.15 க்கு மேல் யாருக்கும் அனுமதி கிடையாது. சினிமா கற்க சினிமாவை பார்க்கும் விதமும் மிக முக்கியம். இந்த திரையிடல் உங்களுக்கு சினிமா கலாச்சாரத்தையும் பகிர இருக்கிறது.

பட்டியல்:

Coen Brothers Films:

10:00am - Fargo (1996) 1h 38m
11:40am - Miller's Crossing (1990)  1h 55m
01:35pm - 2.15 pm Lunch Break (50 minutes)
02:15pm - O Brother, Where Art Thou? (2000) 1h 48m
04:10pm - The Big Lebowski (1998) 1h 59m

அனுமதி இலவசம், அனைவரும் வருக...

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42

Leave Comments

Comments (0)