சிங்கள மயமாகும் தமிழர்களின் நிலங்கள்

/files/detail1.png

சிங்கள மயமாகும் தமிழர்களின் நிலங்கள்

  • 0
  • 0

 

இலங்கையின் 30 வருடத்திற்கும் மேலான நில மீட்பு போர், 2009ம் ஆண்டு இலங்கை அரசின் இனவழிப்பு போருடன்  மெளனிக்கப்பட்ட பின், தற்போது புத்த பெருமானின் உருவச்சிலைகளை வைத்து தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், வவுனியாவில் உள்ள கச்சல் சமனங்குளத்தினையும் அதனை சூழ உள்ள பகுதிகளையும் உள்ளடக்கி சம்புமல்கஸ்கட என சிங்களப்பெயரைச் சூட்டி, சிங்கள குடியேற்றம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கச்சல் சமனங்குளம் தமிழர்களின் ஆதி நிலம். இந்த கிராம மக்களும் அதன் அருகில் உள்ள வெடிவைத்தகுளம் கிராம மக்களும் நீண்ட காலமாக இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொக்கச்சான் குளம் தமிழர்களின் கிராமத்தினையும் அதனை சூழ உள்ள பகுதிகளையும் அபகரித்து கலாபோகஸ்வௌ என்ற பெயரில் சிங்களக்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் தமிழர்களின் நிலங்கள் புத்த மதத்தின் பெயரால் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அங்கு பெரியளவில் புத்த விகாரைகளும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையினத்தினரின் இந்த செயற்பாட்டிற்கு அரசபடைகள் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினரும் துணை நிற்கின்றனர். நாளாந்தம் தமது நிலம் இவ்வாறு அபகரிக்கப்படுவது குறித்து தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


 

Leave Comments

Comments (0)