உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா?

/files/detail1.png

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா?

  • 0
  • 0

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17- வயது சிறுமியை, கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டு முன்பு, பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயும் தீ குளித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதனையடுத்து குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உன்னாவ் சிறுமி பயணித்த காரின்மீது லாரி ஒன்று மோதியது. இதில் சிறுமிக்கும், அவரது வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தீவிர மருத்துவச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிறுமியுடன் பயணித்த அவரின் இரண்டு பெண் உறவினர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண், `தன்னை கொலை செய்வதற்கான முயற்சிதான் அந்த சாலை விபத்து` என்று புகார் அளித்தார்.  

இதனையடுத்து விபத்துக்குக் காரணமான லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரையும், உரிமையாளரையும் கைது செய்து சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். அதன் முதல் விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், குல்தீப் சிங் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு நீக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்கு லாரியை ஓட்டி வந்த ஆஷிஷ்குமார் என்பவர் மீது கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது` என்று பதிவு செய்துள்ளது.

சிபிஐ-யின் இந்த பதிவிற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

Leave Comments

Comments (0)