மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைக்குத் தேசவிரோத வழக்கா? - கே. பாலகிருஷ்ணன் 

/files/detail1.png

மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைக்குத் தேசவிரோத வழக்கா? - கே. பாலகிருஷ்ணன் 

  • 0
  • 0

அரசு வன்முறையாளர்கள் மீதும், கொலைக்குற்றவாளிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவர்களைக் கொண்டாடும் நிலையிலும் நடந்து கொள்வது மனசாட்சியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பதற வைத்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (அக்டோபர் 05) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் மாட்டுக்கறி, ஜெய்ஸ்ரீராம் ஆகியவற்றை முன்வைத்து கும்பல் வன்முறைகளும், கொலைகளும் பெருகியுள்ளதை அரசு ஆவணங்களே வெளிப்படுத்தி வருகின்றன. தற்போது 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, இந்த வன்முறைகள் இரட்டிப்பாகியிருப்பதாக ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல் அமைப்பும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அரசும், அரசு அமைப்புகளும் வன்முறையாளர்கள் மீதும், கொலைக்குற்றவாளிகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், அவர்களைக் கொண்டாடும் நிலையிலும் நடந்து கொள்வது மனசாட்சியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பதற வைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட திரைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் உள்ள 49 பேர் இவற்றைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமருக்குப் பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இது அனைவராலும் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இந்தக்கடிதம் தேசவிரோதமானது என வடமாநிலத்திலுள்ள ஒரு நீதிமன்றம் அறிவித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதையொட்டி இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

alt text

வன்முறைகளையும், கொலைகளையும், சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்த வேண்டிய அரசும், அரசு அமைப்புகளும் மவுனமான நிலையில் இருக்கும்போது தேசபக்தியும், மனித நேயமும், அரசியல் சட்டத்தின் மீது அக்கறையும், ஜனநாயகத்தின் மீது மதிப்பும் கொண்டவர்கள் இச்செயல்களை விமர்சிப்பதும், கண்டிப்பதும், நடவடிக்கை எடுக்கப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் தேச பக்த செயலே. இவற்றைக் கொண்டாடுவதற்கும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் பதிலாகக் கடிதம் எழுதியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் மீதான கொடூரத்தாக்குதலாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அரசு மற்றும் அரசு அமைப்புகள், நீதிமன்றம் ஆகியவற்றின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. மேற்கூறிய கடிதமெழுதிய மனிதாபிமானிகள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. அந்தக் கடிதத்தை எழுதியவர்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஒருமைப்பாட்டையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயக உள்ளம் படைத்த அனைத்துப்பகுதியினரும் வன்முறைக்கு எதிராகக் கடிதம் எழுதியவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)