ஈரானிய பெண் இலங்கை விமான நிலையத்தில் கைது

/files/detail1.png

ஈரானிய பெண் இலங்கை விமான நிலையத்தில் கைது

  • 0
  • 0

ஹைபிரட் குஷ் எனப்படும் ஒருவகை கஞ்சா போதைப் பொருளுடன் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் நாட்டு பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய குறித்த பெண்ணின் பயண பொதியிலிருந்து 400 கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த பெருமதி 16 இலட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் முதற் தடவையாக இவ்வாறானதொரு போதைப் பொருள் மீட்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் போதைப்பொருளுக்கு எதிரான எதிர்ப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கேரளமாநிலத்தில் இருந்து அதிகளவான போதைப்பொருள்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. கேரளாவில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக்கூறி பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே பல வெளிநாட்டினர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈரானிய பெண் புதுவகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)