இலங்கை படையினருக்கு எதிராக  விசாரணை

/files/detail1.png

இலங்கை படையினருக்கு எதிராக  விசாரணை

  • 0
  • 0

 

மிகவும் ஈவிரக்கமற்ற படுகொலைகளில் ஈடுபட்ட 11 படையினரிற்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கவுள்ளதாக என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிப்போரில் அரச படைகள் பாரிய மனித படுகொலைகளில் ஈடுபட்டதாக போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில்,  படுகொலை குற்றச்சாட்டு தொடர்பில்  11 படையினர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவுள்ளனர்  என  பாதுகாப்பு செயலாளர்  ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

படையினர் இழைத்த குற்றங்கள் குறித்த தகவல்கள் ஆதாரங்கள் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொலைகள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் ஏதாவதுயிருந்தால் அவற்றை சமர்ப்பிக்குமாறு புலம்பெயர் தமிழர்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

யுத்தவெற்றி வீரர் ஒருவர் எப்போது கொலைகளில் ஈடுபடுகின்றாரோ அதன் பின்னர் அவர் யுத்தவெற்றிவீரர் என்ற நிலையை இழந்துவிடுவார் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுபவரே யுத்தவெற்றிவீரர் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் 39,000 யுத்தவெற்றிவீரர்கள் மாத்திரமே உள்ளனர் அவர்களில் 34000பேர் இராணுவத்தில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave Comments

Comments (0)