இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளர் ”திரு”வின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை

/files/detail1.png

இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளர் ”திரு”வின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை

  • 3
  • 0

 

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் மேற்பார்வையில், இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை ஜுலை 7ஆம் தேதி நடைபெறுகிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் சுயாதீன திரைப்படவிழாவை தமிழ்ஸ்டுடியோ நடத்தியது. மக்களிடமிருந்து நிதி திரட்டி நடத்தப்பட்ட இந்த மாபெரும் விழா, எதிர்பார்த்த செலவை விடப் பல மடங்கு அதிகமாகச் செலவாகியது. இந்த விழாவிற்கு பிறகான தமிழ் ஸ்டுடியோவின் நிதியைச் சரிசெய்ய இன்னமும் சில ஆண்டுகள் ஆகும். அந்த நிதியைச் சரிசெய்வதற்கான நோக்கமாக ஒருநாள் பயிற்சிப்பட்டறையை நடத்திவருகிறோம். கடந்த ஜுன் 9ஆம் தேதிகூட இயக்குநர் லெனின் பாரதி நடத்தும் சினிமா பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடைபெற்றது.

அவ்வகையில் ஜூலை 7ஆம் தேதி, இந்திய சினிமாவின் ஆளுமைகளாக விளங்கும் பெரும்பாலான ஒளிப்பதிவாளர்களை உருவாக்கிய தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களில் ஒன்றாக விளங்கும் திரு. பி.சி ஸ்ரீராம் இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைக்கும் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறையின் மேற்பார்வையாளராகவும், இறுதியில் சான்றிதழ் வழங்கவும் இருக்கிறார். இந்த ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறையை நடத்த இருப்பவர் இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளரும், இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் பணியாற்றி வருபவருமான திரு என்கிற திருநாவுக்கரசு. ஹே ராம், ஆளவந்தான், லேசா லேசா, கஞ்சிவரம் போன்ற தமிழ்ப்படங்களில், க்ரிஷ் 3, போன்ற இந்திப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கும் இவர், 24 படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததற்காகத் தேசிய விருது பெற்றவர். அண்மையில் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே.

திரு அவர்களின் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை, அதற்கு பி.சி. அவர்களின் மேற்பார்வை என்பது இந்திய சினிமாவின் குறிஞ்சிப்பூ போன்ற செயல். இருவரும் மிக பிஸியான தங்கள் பணிகளுக்கிடையிலும், தமிழ் ஸ்டுடியோவின் தொடர் நிதி சிக்கலுக்காக இந்த ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறைக்குச் சம்மதித்துள்ளார். 

சினிமாவில் ஒரு காட்சியை எப்படி ஷாட் பிரித்து, லைட்டிங் அமைத்து படம் பிடிப்பார்களோ, அப்படி ஒரு செய்முறை பயிற்சியோடு இந்த பயிற்சி மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. செலவுகளைக் கணக்கிட்டு 3500 ரூபாய் நன்கொடையாகக் கோரப்பட்டுள்ளது. உதவி தொழில்நுட்ப கலைஞர்கள், சினிமா ஆர்வலர்கள், சினிமா படிக்கும் மாணவர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாள்: 07-07-2019, ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.

நன்கொடை: 3500 ரூபாய் (மூவாயிரத்து ஐநூறு ரூபாய்) மதிய உணவுடன்

தலைப்பு: ஒளிப்பதிவு ஷாட் பிரிக்கும் முறை, படப்பிடிப்பு தளத்தில் உருவாக்கப்படும் காட்சி, ஷாட், லைட்டிங், கோணங்கள் பற்றிய செய்முறை பயிற்சி.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405.
 

Leave Comments

Comments (0)