உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!

/files/detail1.png

உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!

  • 0
  • 0


\r\nவித்யா 

 

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

உலகின் முதல் 10 இடங்களில் உள்ள பணக்கார நாடுகளைக் கண்டறிய ஏ.எஃப்.ஆர். ஆசிய வங்கி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில் முதலிடத்தில் 62,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் 24,803 பில்லியன் டாலர்களுடன் சீனாவும், மூன்றாவது இடத்தில் 19,522 பில்லியன் டாலர்களுடன் ஜப்பானும், நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும், ஐந்தாவது இடத்திலும் 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனியும், ஆறாவது இடத்தில் 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியாவும் உள்ளன. இந்தியாவிற்கு அடுத்த நிலையில் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. 

இதில் ஒரு நாட்டிலுள்ள தனிநபர்கள் வைத்திருக்கும் சொத்துகள், மொத்த சொத்து மதிப்பைக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்பட்டன. நிலம், பணம், தொழில் அமைப்புகள், பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவை சொத்துகளாகக் கருதப்பட்டு கடன் தொகை அதிலிருந்து கழிக்கப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசாங்க உதவிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. மேலும் அதிகபட்ச தொழில்முனைவோர், சிறந்த கல்வி முறை, உறுதியான மென்பொருள் துறை, பிபிஓ சேவைகள், ரியல் எஸ்டேட் துறை, மருத்துவம் மற்றும் ஊடகத் துறை போன்றவை இந்தியா இந்த இடத்தை அடைய உதவியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவின் சொத்து மதிப்பு மேலும் 200 சதவீதம் உயரும் எனவும் அப்போது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடிக்கும். அடுத்த பத்தாண்டுகளில் உலகின் மொத்த சொத்து மதிப்பு 50 சதவீதம் அதிகரிக்கும். இலங்கை, இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் மொரீஷியஸ் போன்றவற்றின் சொத்து மதிப்பு வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் 5,84,000 கோடீஸ்வரர்கள் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சராசரியாக 1 கோடி டாலர் உள்ளது. உலகில் 2,252 பெரும் பணக்காரர்கள் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சராசரியாக 100 கோடி டாலர் உள்ளது என ஏஎஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\r\n

Leave Comments

Comments (0)