விழுப்புரத்தில் இந்தியாவின் முதல் தலித் திரைப்பட விழா 

/files/detail1.png

விழுப்புரத்தில் இந்தியாவின் முதல் தலித் திரைப்பட விழா 

  • 0
  • 0

எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு விழா தொடக்கவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் தலித் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.

தமிழ் ஸ்டுடியோவின் 12ஆம் ஆண்டு விழா தொடக்க விழாவில் புதிய முன்னெடுப்பாக வருகிறது, தலித் கலை இலக்கிய கழகம். இதன் செயற்பாட்டில் முதலாவதாகத் தமிழ்நாடு முழுக்க தலித் திரைப்பட விழாக்கள் நடத்தப்பட உள்ளது. அவ்வகையில் எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி இந்தியாவிலேயே முதல் தலித் திரைப்பட விழா விழுப்புரத்தில் நடைபெற உள்ளது.

இதனைத் தோழரும் இயக்குநருமான கோபி நயினார் தொடங்கி வைக்கிறார். விழுப்புரம் மக்கள் தயாராக இருங்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக தலித் திரைப்பட விழாவினை நடத்தும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு. 

இடம்: பிராக்ஸிஸ் படிப்பகம், எல்லிசத்திரம் சாலை, VGP நகர், வழுதரெட்டி, புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம்-605602

தொடர்புக்கு: 98406 44916, 9952534083

Leave Comments

Comments (0)