இந்தியாவின் முதல் உதவி இயக்குநர்கள் பயிற்சி மையம் தொடக்க விழா

/files/detail1.png

இந்தியாவின் முதல் உதவி இயக்குநர்கள் பயிற்சி மையம் தொடக்க விழா

  • 0
  • 0

 

எதிர்வரும் 14ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பியூர் சினிமா புத்தக அங்காடியில், இந்தியாவின் முதல் உதவி இயக்குனர்களுக்குகான பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெறுகிறது. 

தமிழ் ஸ்டுடியோ பேரியக்கம் இத்துனை நாட்களாய் தமிழ் சினிமாவிற்கு மாற்றாகவும், இணையாகவும் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும் தமிழ் சினிமாவோடு இணைந்து சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. உதவி இயக்குநர்கள் எனும் எதிர்கால இயக்குநர்களை தொழில்ரீதியாகப் பயிற்றுவிப்பதன் வாயிலாகத் தமிழ் சினிமாவிலும் தமிழ் ஸ்டுடியோ குறைந்தபட்ச மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று நம்புகிறது. அதன் காரணமாகவே தொடர்ச்சியாக நிகழ்கால சினிமா கலைஞர்களோடு கலந்துரையாடலையும் தமிழ் ஸ்டுடியோ முன்னெடுத்து வருகிறது. இதன் நீட்சியாக தற்போது இந்தியாவின் முதல்முறையாகத் தொடங்கப்படும் இந்த உதவி இயக்குநர் பயிற்சி மையமும் செயல்படும். 

சிறப்பு விருந்தினர்கள்

திரைப்பட இயக்குனர் பாலாஜி சக்திவேல்
திரைப்பட இயக்குனர் வசந்த பாலன்
எடிட்டர் லெனின்
ஒளிப்பதிவாளர் ஞானம் சுப்ரமணியன்

ஒரு மாற்றத்தை நோக்கிய இந்த பயணத்திற்காக உங்கள் எல்லாரையும் அன்போடு அழைக்கிறோம். அவசியம் வாருங்கள். அனைவரும் வருக, அனுமதி இலவசம்.

நாள்: 14.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு. 

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

Leave Comments

Comments (0)