இலங்கையில் தென்னாபிரிக்காவின் சுதந்திர தின விழா?

/files/detail1.png

இலங்கையில் தென்னாபிரிக்காவின் சுதந்திர தின விழா?

  • 0
  • 0

தென்னாபிரிக்காவின் சுதந்திர தின விழாவை இம்முறை இலங்கையின் யாழ்ப்பான மாவட்டத்தில் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பி மார்க்ஸ் மற்றும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் இடையே சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, மூன்று முக்கிய விடையங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அதில், தென்னாபிரிக்காவின் சுதந்திர தினத்தை யாழில் விழாவாக கொண்டாடுவது, இதில் தெரிவு செய்யப்படும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திட்டங்களை வழங்குவது, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிா் வரும் மாதம் ஐநாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை மீதான தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்த முதல்வர், இம்முறை கொண்டுவரப்படுகின்ற தீர்மானத்தில்தான் இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து ஐநாவில் இருக்கப்போகின்றதா இல்லையா என்று தெரியும். 

தீர்மானத்தின் மீதான நம்பிக்கை குறைவாக இருந்ததனாலையே சர்வதேசத்தின் அனுசரணையோடு 34-1 தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கை மீதான தீர்மானம் குறித்து சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகுந்த முயற்சியை எடுத்திருந்தது. 

இலங்கை அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். ஐநாவில் வரவுள்ள தீர்மானம் குறித்து கூட்டமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதில் மக்களின் கருத்தையும் கேட்க வேண்டியது முக்கியம் என நான் கருதுகிறேன் என்றார். இந்த சந்திப்போது யாழ் நகரின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave Comments

Comments (0)