இலங்கையில் இந்தியர்கள் கைது

/files/detail1.png

இலங்கையில் இந்தியர்கள் கைது

  • 0
  • 0

இலங்கையில்  தங்கியிருந்த இந்தியர்கள் 24 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த அவர்கள் அனைவரும் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இந்தியர்களின் விசா காலம் நிறைவடைந்திருப்தாகவும் கைது செய்யப்பட்ட 24 பேரும் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தெரிவித்துள்ளது.

Leave Comments

Comments (0)