கேப்பாப்புலவில் பதற்றம்

/files/detail1.png

கேப்பாப்புலவில் பதற்றம்

  • 0
  • 0

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாப்புலவு என்ற ஊரில் அரச படையினரின் முகாம்களை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை அந்த ஊரின் மக்கள் முன்னெடுத்தனர்.

இலங்கையின் போர் முடிவுற்ற பின், படையினர் தமது  காணிகளை அபகரித்துள்ளதாக குற்றம்சுமத்தி, கடந்த இரு வருடங்களாக மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த காணிகள் விடுவிப்பு குறித்து பல சந்திப்புக்கள் நடைபெற்ற போதும் இன்னமும் பல குடும்பங்களின் காணிகள் விடுவிக்க படைத்தரப்பு மறுத்து வருகின்றது.

இந்நிலையில், படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள்  இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்கள் என இரு பெண்கள் மீது வழக்குத்தொடரப்பட்ட நிலையில், ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுக்க நீதிமன்றம் அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

alt text

இதையடுத்து மக்கள் ஜனநாயக ரீதியில் தமது போராட்டத்தை ஆரம்பித்த போது, பெருமளவிலான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதோடு, படையினர் மற்றும் படை புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு மக்கள் மத்தியில் பதற்ற நிலை காணப்படுகின்றது.

கேப்பாப்புலவில் உள்ள தங்களது காணிகளை விடுவித்துத் தருமாறு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேப்பாப்புலவு பிரதேசத்தில் வசித்த 84 குடும்பங்களினால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், குறித்த விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு மாதகால அவகாசம் வழங்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தினால் கோரப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், கேப்பாப்புலவு மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் தென்னிலங்கையை சேர்ந்த பொதுமக்களும், அருட்சகோதரிகளும் பொது அமைப்புக்களும் பங்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave Comments

Comments (0)