அவர்கள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா? தாக்கப்பட்ட  மாணவனின் குடும்பம் ஆதங்கம்!

/files/detail1.png

அவர்கள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா? தாக்கப்பட்ட  மாணவனின் குடும்பம் ஆதங்கம்!

  • 0
  • 0

 

கஞ்சா மற்றும் மது விற்பனை தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மாணவனை தமிழ் மக்கள் கூட்டணியினர்  நேரில் சந்தித்தபோது, புலிகள் இயக்கம் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலையேற்பட்டிருக்காது என மாணவனின் குடும்பத்தினர் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் காவல்துறையினருக்குத் தகவலை வழங்கியமைக்காக தாக்குதலுக்குள்ளாகிய கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவனை அவரது வீட்டில் வைத்து தமிழ் மக்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தமிழ் மக்கள் கூட்டனியின் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ரெஜி தலைமையில் நிர்வாக இணை உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், மகளிர் அணி உப செயலாளர் இளவேந்தி நிமலராஜன் மற்றும் மத்தியகுழுவின் நிவாகக்குழு உறுப்பினர் இரா.மயூதரன் உள்ளிட்டோருடன்  இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மாணவனும் அவரது குடும்பத்தினரும் சம்பவம் குறித்தும் அதன் பின்னரான சமூக ரீதியில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் தமிழ் மக்கள் கூட்டணியினரிடம் எடுத்துக் கூறியிருந்த போது தமிழீழ விடுதலைப்புலி இயக்கம் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது  என தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடக்கு கிழக்குப்பகுதிகளில் மது பயன்பாடு மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் போன்றன அதிகரித்துள்ளது. இந்த வர்த்தக அதிகரிப்புக்கு அரச படைப்பிரிவும் துணை நிற்பதாக கூறப்படுகின்றது. அதற்கு கடந்த கால சம்பவங்களும் சாட்சிகாளாக உள்ளது சுட்டிக்காட்டத்தக்கது. இது இவ்வாறு   இருக்கின்ற  போதும்  இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருள் பயன்பாடு, விற்பனை மற்றும் கடத்தல் போன்ற செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க முப்படையினருக்கு கட்டளையிட்டுள்ளார். அத்தோடு போதைப்பொருளுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றார்.

alt text

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியமை குறித்த தகவலை காவல்துறையினருக்கு வழங்கிய மாணவன் ஒருவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை.

2009ம் ஆண்டுக்கு  முன் தமிழீழத்தில் போதைப்பொருள் பயன்பாடு விற்பனைக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த பயன்பாடு தொடர்பில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனையும் தமிழீழ குற்றவியல் சட்டம் மூலம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)