கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !
April 18, 2021 - selvamani T
April 20, 2021,6:49:04 PM
போராடும் மாணவர்கள் உள்ளிட்ட மக்கள்மீது ஒடுக்குமுறையைத் திணிக்கும் பாஜகவின் பாசிச அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஜனநாயக சக்திகள் யாவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அங்கே நடைபெற்ற போராட்டத்தின்போது 4 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, தடியடி நடத்திக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்ததும், தாக்குதல் நடத்தியதும், மாணவர்களைக் கைகளை உயர்த்தி அணிவகுப்பாக நடக்க வைத்ததும், கைது செய்ததும் சட்டவிரோதமானது. அத்துடன், காவல்துறையினரே இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் இந்தப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தில்லி துணை முதலமைச்சர் திரு.மனிஷ் சிசோடியா அவர்கள், பேருந்தில் காவலர்கள் கேன் வைத்து பெட்ரோலை ஊற்றுகின்ற சில புகைப்படங்களைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். `இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள் பேருந்துகள் மீது யார் தீவைத்தது என்பது தெரியும். பாஜகவின் மோசமான அரசியலுக்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி. இதற்கு பாஜக தலைவர்கள் விளக்கமளிக்க முடியுமா? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிகழ்வுகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னையில் காவல்துறையினர் வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்த காணொளிகள் வெளியானதையும், அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பான காணொளிகள் வெளியானதையும் நினைவுபடுத்துகின்றன.
மாற்றுக்கருத்தே கூடாது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில், போராடும் மாணவர்கள் உள்ளிட்ட மக்கள்மீது ஒடுக்குமுறையைத் திணிக்கும் பாஜகவின் பாசிச அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தற்போது ஜனநாயக சக்திகள் யாவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் தேவை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விழைகிறது.
மதவாத பாஜக அரசின் ஏவுதலின்படி, காவல்துறையினர் புதுதில்லியில் மாணவர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வகையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
காப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments