திருப்பு முனையை ஏற்படுத்தியதா ? சென்னை சர்வதேச திரைப்பட விழா !
February 26, 2021 - selvamani T
February 27, 2021,2:31:08 AM
தமிழில்:வே.கோபி
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மத்திய சிறையின் துணை கண்காணிப்பாளர் வர்ஷா டோங்க்ரே.இவர் தன் முகநூல் பதிவில் ஆதிவாசிகளுக்கு எதிராக அரசுகள் நடத்தும் மனித உரிமை மீறல்களையும் நக்சல் விஷயத்தில் சட்டீஸ்கர் அரசு கையாளும் விதத்தையும் எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட இந்த பதிவு தற்போது முகநூலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.
\r\nகடந்த மாதம் சுக்மாவில் நடந்த நக்சல் தாக்குதலில் மத்திய காவல் படையினைச் சேர்ந்த 25 பேர் பலியான சில நாட்களில் டோங்க்ரே இப்பதிவை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நக்சல் விஷயம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவரால் தவறான தகவல்கள் சமூக வலைதளத்தில் பரப்பப்படுவதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது.முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இப்பதிவை லோங்கரே தான் எழுதினாரா, எழுதியதற்கான காரணம் என்ன போன்றவற்றை சிறைத்துறை அதிகாரி ஆர்.ஆர்.ராய் விசாரிப்பார்.மேலும் டோங்க்ரே தன் பக்க நியாத்தை கூறவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.” என்று தலைமை சிறைத்துறை ஆய்வாளர் கே.கே.குப்தா கூறியுள்ளார்.
ஏற்கனவே சட்டீஸ்கர் அரசாங்கம் அரசாங்க அதிகாரிகள் சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பதிவதற்கு விதிமுறைகள் வகுத்துள்ளதாக மூத்த சிறை அலுவலர்கள் கூறுகிறார்கள்.
\r\nடோங்க்ரே எழுதிய முகநூல் பதிவு.
எந்த சம்பவத்திலும் இரு பக்கமும் இறப்பவர்கள் நமது மக்களே.அவர்களும் இந்திய நாட்டினரே.ஆகையால் தான் யார் இறந்தாலும் நாமும் பதிக்கப்படுகிறோம்.
\r\nஆதிவாசிகளின் நிலத்தில் முதலாளித்துவ அமைப்புமுறை திட்டமிட்டே திணிக்கப்படுகிறது.மொத்த கிராமத்தையும் எரித்து பெண்களைச் சூறையாடி அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டி அடித்து காட்டினைச் சொந்தமாக்கி கொள்கிறார்கள்.நக்சல் என சந்தேகிக்கும் பெண்களை மானபங்கம் செய்கிறார்கள்.
\r\nபுலிகள் சரணாலயம் என்று கூறி திட்டமிட்டு ஆதிவாசிகள் தங்கள் நிலத்திலிருந்தும் காடுகளிலிருந்தும் விரட்டப்படுகிறார்கள்.ஆதிவாசிகளின் நிலங்களை ரானுவத்தைக் கொண்டு கையகப்படுத்தக்கூடாது என அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை கூறுகிறது.
இதெல்லாம் நக்சலிசத்தை நிறுத்துவதற்காகவா செய்கிறார்கள் என்றால் நிச்சியமாக இல்லை.அங்கிருக்கும் காடுகள் முழுவதிலும் இயற்கை தாதுக்கள் உள்ளன.அதனை நிறுவனங்களுக்கு விற்பதற்காகவே ஆதிவாசிகளை காடுகளை விட்டு விரட்டி அடிக்கிறார்கள்.இதுவே உண்மையான காரணம்.
\r\nஆதிவாசிகளின் வீடே இந்த காடுகள்தான்.அதனை எப்படி காலி செய்வார்கள்.நக்சலிசத்தை ஆதிவாசிகளும் எதிர்க்கிறார்கள்.ஆனால் பாதுகாக்க வேண்டிய அரசே அவர்களின் மகளை கற்பழித்தும்,வீடுகளை எரித்தும்,பொய் குற்றச்சாட்டு கூறி சிறையில் அடைப்பதுமாக இருந்தால் அவர்கள் யாரிடம் நியாயம் கேட்கச் செல்வார்கள்.
எந்த ஒரு மனித உரிமை செயற்பாட்டாளரோ பத்திரிக்கையாளரோ இங்கு நடப்பதை வெளி உலகிற்கு சொல்ல முயற்சித்தால் அவர்களைப் பொய் புகார் கூறி சிறையில் அடைக்கிறது அரசு.ஆதிவாசிகளின் பகுதிகளில் எல்லாம் நலமாக இருந்தால் ஏன் அரசாங்கம் பயப்பட வேண்டும்?ஏன் அங்கு ஒருவரையும் அனுமதிக்க மறுக்கிறது அரசு?
காவல் நிலையத்தில் வைத்து 14 மற்றும் 16 வயதான இரு ஆதிவாசி பெண்களின் ஆடை களையப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதை என் கண்களால் பார்த்தேன்.அவர்களின் உடற்பாகங்களில் மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட தடயத்தையும் பார்த்தேன்.ஏன் இவ்வுளவு கொடூரமான சித்ரவதைகள் சிறு பெண்கள் மீது நிகழ்த்தப் படுகிறது?
ஒருவரை கொடுமைப் படுத்தும் அதிகாரத்தை யாருக்கும் நமது அரசியலமைப்பு வழங்கவில்லை.வளர்ச்சி என்ற பெயரில் ஆதிவாசிகள் கொடுமைப்படுத்துவதை இனியாவது நிறுத்த வேண்டும்.ஆதிவாசிகள் இயற்கையின் பாதுகாவலர்கள்.முதலாளித்துவத்தின் இரு முகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.விவசாயிகளும் ரானுவ வீரர்களும் நமது சகோதரர்கள்.ஒருவரை ஒருவர் கொல்வதின் மூலம் எந்த வளர்ச்சியும் அமைதியும் உண்டாகாது.
\r\nநானும் இந்த அமைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.அதனை எதிர்த்து போராடி வெற்றியும் பெற்றேன்.எனக்கு எதிராக பல சதிகளில் ஈடுபட்டார்கள்.லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்.இறுதியில் நீதி வென்றது.
\r\nநமக்கு இன்னும் காலம் இருக்கிறது.இப்போது உண்மைக்கு ஆதரவாக நாம் நிற்கவில்லை என்றால் நம்மை பகடை காயாக்கி மனிதத்தன்மையை இந்நாட்டிலிருந்து முதலாளிகள் விரட்டி விடுவார்கள்.அநீதிக்கு எதிராக போராடுவோம் என இந்த சமயத்தில் உறுதியேற்று கொள்வோம்.அரசியலமைப்பின் புகழ் ஓங்குக!இந்தியாவின் புகழ் ஓங்குக!
2003ம் ஆண்டு சட்டீஸ்கர் மாநில தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி வர்ஷா டோங்க்ரே 2006ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.அவ்வழக்கில் வெற்றிபெற்று சிறைத்துறை துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்றார்.
“முகநூல் பதிவு பற்றி ஊடகத்திடம் பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை.எங்கு பேச வேண்டுமோ அங்கு நான் பேசுவேன்” என டோங்க்ரே கூறியதாக பத்ரிக்கா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Article link: https://thewire.in/politics/chhattisgarh-jail-human-righs
\r\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments