இயக்குனர் K.பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை

/files/detail1.png

இயக்குனர் K.பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை

  • 0
  • 0

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இயக்குநர், நடிகர் பாக்யராஜ் ”திரைக்கதை எழுதுவதை எப்படி?”என்பது குறித்த  பயிற்சிப்பட்டறை நடத்துகிறார்.

இந்திய சினிமாவின் திரைக்கதை மேதமைகளில் மிக முக்கியமான ஆளுமை இயக்குனர் நடிகர் கே. பாக்யராஜ். தொடர்ந்து பத்து படங்களை வெற்றிப்படமாகக் கொடுத்தவர். அத்துணை படங்களும் திரைக்கதை அமைத்தலுக்கான பாடமாக இருப்பவை. இன்று வரை இயக்குனர் கே. பாக்யராஜ் போன்றதொரு திரைக்கதை ஆசிரியர் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவில்லை. இயக்குனர் கே. பாக்யராஜ் தமிழ் ஸ்டுடியோவின் சில புதிய முன்னெடுப்புகளை நிதி திரட்டும் விதமாக திரைக்கதை பயிற்சிப் பட்டறை ஒன்றினை நடத்திக்கொடுக்க இருக்கிறார். தமிழ் ஸ்டுடியோ புதிதாக முன்னெடுக்கும் பல்வேறு துறை சார்ந்த முன்னெடுப்புகளுக்காக இந்த பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது. ஒரு இயக்கம் நடத்தும் பயிற்சிப்பட்டறை என்பது சமூக மாற்றத்திற்காக அவ்வியக்கம் மேற்கொள்ளும் களப்பணிகளுக்கான பணத் தேவையைப் பூர்த்தி செய்வது. தமிழ் ஸ்டுடியோ எப்போதும் மக்கள் இயக்கம் என்பதால், பங்கேற்பாளர்களிடம் அதிகம் பணம் பெறாமல், அதே நேரத்தில் தன்னுடைய செயல்பாடுகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும் முயற்சி செய்கிறது. இது எல்லாவற்றின் அடிநாதமாக சினிமா கல்வியை எல்லாருக்கும் எளிய விதத்தில் கொண்டு போய் சேர்ப்பது என்கிற சித்தாந்தமும் செயல்படுகிறது. எனவே நண்பர்கள் இதனை தங்களின் சமூக கடமையாகக் கருதி, திரளாக இந்த பயிற்சிப்பட்டறையில் பங்கேற்று பயிற்சி சிறப்படையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தலைப்பு: திரைக்கதை எழுதுவதை எப்படி?

நாள்: 15.09.2019 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.

கட்டணம்: 2500/- (மதிய உணவு உட்பட), செப்டம்பர் 10 வரை. அதற்கு மேல் 3500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

கூகுள் மேப்: https://goo.gl/maps/bMYcANLkNG42

 

 

 

 

Leave Comments

Comments (0)