கொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1
கொரோனா நோயை அறிகுறிகளை வைத்து எவ்வாறு அதன் போக்கை கணிக்க முடியும்???
கொரோனா வைரஸ் ஒருவரிடத்தில் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது
தொற்றை பெறுபவர் அனைவருக்கும் அது நோயாக மாறுவதில்லை
தொற்று மட்டும் பெற்று நோய் நிலைக்கு செல்லாதவர்களுக்கு வந்திருப்பது INFECTION மட்டும். அதாவது "நோய்த் தொற்று" மட்டுமே.
தொற்றைப்பெற்று நோயின் அறிகுறிகளை வெளிக்காட்டுபவர்களுக்கு கோவிட் நோய் வந்திருக்கிறது என்று அர்த்தம்.
இதை "COVID DISEASE" என்று அழைக்கிறோம்.
இந்த நோய் பெரும்பான்மை
பின்வரும் அறிகுறிகளாய் வெளிப்படுகிறது
காய்ச்சல்
உடல் வலி / உடல் சோர்வு
இருமல்
மூச்சு விடுவதில் சிரமம்
வயிற்றுப் போக்கு
என்று வெளிப்படுகிறது
இன்னும் சிலருக்கு
வாசம் நுகர்தலில் குறைபாடு
சுவை அறிவதில் குறைபாடு
என்றும் வெளிப்படுகிறது
இருப்பினும்
மேற்சொன்ன காய்ச்சல் / கடும் உடல் வலி / இருமல் / சோர்வு என்றே முதலில் ஆரம்பிக்கிறது
பிறகு இருமல் சேர்ந்து கொண்டு
அடுத்த சில நாட்களில் மூச்சு விடுவதில் சிரமம் / மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
காய்ச்சல் / உடல் வலி என்றால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்
கொரோனா கட்டுப்பாட்டு வளையத்துக்குள் உங்கள் வீடு இருந்து
தங்களுக்கு காய்ச்சல் / உடல் வலி / இருமல் / உடல் சோர்வு ஏற்படுமாயின் உடனே அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவியுங்கள்.
உங்களுக்காக பரிசோதனை எடுக்கப்படும்.
தேவைக்கு ஏற்ப வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ சிகிச்சை கிடைக்கும்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான 90% பேர் எந்த அறிகுறிகளும் காட்டாத தொற்று வகைக்குள் வருகின்றனர்.
எனவே தொற்று ஏற்பட்ட அனைவரும் மரணமடையப்போவதில்லை
வீண் பீதி வேண்டாம்.
அதிக கவனம் தேவைப்படும் வகுப்பினர்
✅முதியோர் ( 50+ வயது)
✅நீரிழிவு/ ரத்த கொதிப்பு / இதய நோய் / சிறுநீரக நோய் / புற்று நோய் இருப்பவர்கள்
✅கர்ப்பிணிகள்
அறிகுறிகள் தோன்றினால் அலட்சியம் செய்யாமல் உடனே உங்கள் ஊரில் உள்ள அரசு பிரத்யேக கோவிட் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
அலட்சியம் - தாமதம் - தவறு.
வெளியே அவசியம் தேவை இல்லாமல் செல்ல வேண்டாம்
முகக்கவசம் அணியவும்
கைகளை சோப் போட்டு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை கழுவவும்
தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும்
கொரோனாவை வெல்லலாம்
நம்பிக்கையுடனும்
எச்சரிக்கையுடனும்
வாருங்கள்
நம்பிக்கையை விதைத்தால்
முளைப்பதும் நம்பிக்கையே...
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
Leave Comments