இன்னும் எத்தனை உயிர்கள் தேவை இந்த மலக்குழி படுகொலைகளைத் தடுத்து நிறுத்த?-  பா. ரஞ்சித்

/files/detail1.png

இன்னும் எத்தனை உயிர்கள் தேவை இந்த மலக்குழி படுகொலைகளைத் தடுத்து நிறுத்த?-  பா. ரஞ்சித்

  • 0
  • 0

மலக்குழி மரணம் குறித்து இன்னும் எத்தனை உயிர்கள் தேவை இந்த மலக்குழி படுகொலைகளைத் தடுத்து நிறுத்த என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.

சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாப்பிங் மாலின் கீழ் தளத்தில் உள்ள மலக்குழியில் அடைப்பு ஏற்பட்டதால் அதைச் சரிசெய்ய நேற்று (நவம்பர் 12)  காலை அருண்குமார், அவரது தம்பி ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 துப்புரவுத் தொழிலாளிகள் சென்றுள்ளனர்.

மலகுழியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ரஞ்சித் குமார் விசவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது அண்ணன் அருண்குமார் உடனே மலக்குழியில் இறங்கி ரஞ்சித்தைக் காப்பாற்றினார். இதனையடுத்து அருண்குமார் மலக்குழியிலிருந்து வெளியில் ஏற முற்பட்டபோது விச வாயு தாக்கியதில் அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இச்சம்பவம் தொடர்பாக இயக்குனர் பா. ரஞ்சித், “தொடரும் மலக்குழி மரணங்கள் மக்கள். அதி நவீன எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த அருண்குமார் என்ற இளைஞர் விசவாயு தாக்கி உயிரிழப்பு. பேர் அவலம். தமிழக அரசே இன்னும் எத்தனை உயிர்கள் தேவை இந்த மலக்குழி படுகொலைகளைத் தடுத்து நிறுத்த” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

Leave Comments

Comments (0)