கதை எப்படி காட்சியாகிறது?: சினிமா பயிற்சிப்பட்டறை 

/files/detail1.png

கதை எப்படி காட்சியாகிறது?: சினிமா பயிற்சிப்பட்டறை 

  • 0
  • 0

சாமானிய மனிதர்களின் வாழ்வை அச்சு பிசறாமல் காட்டிய மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, "கதை எப்படி காட்சியாகிறது, காட்சி எப்படி ஷாட் ஆகிறது, ஷாட் பிரிக்கும் வழிமுறைகள், அரசியல் சினிமாவின் தேவை" போன்ற தலைப்பின் கீழ் ஒருநாள் சினிமா பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்துகிறார். 

கடந்த பிப்ரவரி மாதம் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் சுயாதீன திரைப்படவிழாவை தமிழ்ஸ்டுடியோ நடத்தியது. மக்களிடமிருந்து நிதி திரட்டி நடத்தப்பட்ட இந்த மாபெரும் விழா, எதிர்பார்த்த செலவை விடப் பல மடங்கு அதிகமாகச் செலவாகியது. இந்த விழாவிற்கு பிறகான தமிழ் ஸ்டுடியோவின் நிதியைச் சரிசெய்ய இன்னமும் சில ஆண்டுகள் ஆகும். அந்த நிதியைச் சரிசெய்வதன் தொடர்ச்சியாக இந்த மாதம் 9ஆம் தேதி இயக்குநர் லெனின் பாரதி நடத்தும் சினிமா பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்திருக்கிறோம். 

alt text

தமிழ் ஸ்டுடியோவின் நிதியாதாரம், மற்றும் சினிமா கல்வியை எல்லாருக்கும் கொண்டு செல்லும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயிற்சிப்பட்டறையை ஒரு பைசா கூடப் பெற்றுக்கொள்ளாமல் நடத்திக்கொடுக்க முன்வந்துள்ளார் லெனின் பாரதி. இந்த பயிற்சிப்பட்டறை உங்கள் சினிமா பற்றிய அத்துணை பார்வைகளையும் மாற்றியமைக்கலாம். சினிமாவை உங்களுக்கு இன்னொரு கோணத்தில் கற்றுக்கொடுக்கலாம். நேர்மையான, உண்மையான சினிமாவை நீங்கள் பயிற்சியின் முடிவில் உணர்ந்துகொள்ளலாம். இந்த அனுபவத்தைப் பெற, அவசியம் இந்த ஒரு நாள் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்ளுங்கள். இந்த வாய்ப்பு வாழ்வில் எப்போதாவதுதான் கிட்டும். தவறவிடாதீர்கள்.

நாள் : 09-06-2019, ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

நன்கொடை: 1000 ரூபாய் (ஆயிரம் ரூபாய்)

தலைப்பு: கதை எப்படி காட்சியாகிறது, காட்சி எப்படி ஷாட் ஆகிறது, ஷாட் பிரிக்கும் வழிமுறைகள், அரசியல் சினிமாவின் தேவை.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்
https://goo.gl/maps/bMYcANLkNG42
 

Leave Comments

Comments (0)