ஹொங்கொங், மலேசியாவிடம் உதவிகோரும் இலங்கை

/files/detail1.png

ஹொங்கொங், மலேசியாவிடம் உதவிகோரும் இலங்கை

  • 0
  • 0

இலங்கையில் ஊழல் குற்றங்கள்  நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில் ஹொங்கொங், மலேசியா நாடுகளிடம் இலங்கை அரசு உதவிகோரியுள்ளது.

அண்மைக்காலத்தில் இலங்கையில் நடந்த மிகப்பெரிய ஊழல் வழக்காக மத்திய வங்கி பிணை முறி ஊழல் வழக்கு உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த இந்த  குற்றச்சாட்டில் 11,450 மில்லியன் இலங்கை ரூபாய்கள் மதிப்புடைய பிணை முறி ஊழல்  நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு, ஹொங்கொங் மற்றும் மலேசியா நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒஸ்ட்ரியாவின் வியானா நகரில் நடைபெற்று வரும் இலஞ்ச மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டிற்கு இணையாக நடைபெற்ற பேச்சுகளின் அடிப்படையிலேயே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  கருத்து தெரிவித்துள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன, இதற்கான திட்டத்தை வகுப்பதற்காக, எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஹொங்கொங் அதிகாரிகள் கொண்ட குழுவினர், நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மலேஷியாவின் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவருடனான சந்திப்பின்போது, இலங்கையின் அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave Comments

Comments (0)