கொரோனா மரணங்களும் கையாலாகாத அரசுகளும் !
April 18, 2021 - selvamani T
April 21, 2021,12:33:35 AM
-V.கோபி
இரு மதத்தைச் சேர்ந்த கனவன் மனைவியர் லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க சென்றபோது அங்குள்ள அதிகாரி ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டு அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் மனமுடைந்த அவர்கள் இவ்விஷயத்தில் தலையிடுமாறு பிரதமர் அலுவலகத்திற்கும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகமது அனாஸ் சித்திக், தன்வி சேத் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இருவரும் ஒன்றாக நொய்டாவில் பணிபுரிகிறார்கள்.
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்காக ஜூன் 20ம் தேதி லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்கள்.அங்கு நடந்த நேர்காணலில் இரண்டு கட்டத்தை நிறைவு செய்தவர்கள் மூன்றாவது கட்டத்தில் அதிகாரியை சந்தித்த போது பிரச்சனை வெடித்துள்ளது.
இதுபற்றி செய்தியாளரிடம் கோபத்தோடு பேசிய அனாஸ், “முதலில் சென்ற என் மனைவியிடம் விகாஸ் மிஷ்ரா என்ற அதிகாரி ஆவணங்களை வாங்கி சரிபார்த்தபடி உரத்த குரலில், நீங்கள் அவரை திருமணம் செய்திருக்ககூடாது என்றுள்ளார்.இதை கேட்டு அழுத என் மனைவிடம்,அனைத்து ஆவணங்களிலும் பெயரை மாற்றி வருமாறு கூறியுள்ளார்.
பெயரை மாற்றிகொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை.இந்தப் பெயர்களால் எங்கள் குடும்பத்தினருக்கும் எந்த் பிரச்சனையும் இல்லை என என் மனைவி கூறியுள்ளார். இதன்பின்னர் எனது மனைவியை துணை பாஸ்போர்ட் அதிகாரியிடம் செல்லுமாறு அவர் கூறியுள்ளார்.
\r\nஅடுத்த்தாக என்னை அழைத்த மிஸ்ரா, என்னை அவமானப்படுத்தும் நோக்கில் கேள்விகளை கேட்டார்.இந்து மதத்திற்கு மாறவில்லை என்றால் உங்கள் திருமணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஆகையால் மதம் மாறிவிடுகிறீர்களா எனவும் கேட்டார்.
அடுத்து நாங்கள் இருவரும் விஜய் திரிவேதி என்ற அதிகாரியை சந்தித்தபோது,நீங்கள் தவறான அதிகாரியை சந்தித்துள்ளீர்கள் என்றார்.நடந்த சம்பவத்திற்கு எங்களிடம் வருத்தம் தெரிவித்தவர், நடந்த அனைத்தையும் குறைதீர்ப்பு மையத்திடம் எழுதிக்கொடுக்குமாறும் கூறினார்.
\r\nபின்னர் கனவன் மனைவி இருவரும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இவ்விஷயத்தில் தலையிடக்கோரி டிவிட்டரில் அவருக்கு செய்தி அனுப்பினர்.
அவரின் டிவிட்டர் பதிவு…..
“இந்நாட்டின் நீதி மீதுள்ள நம்பிக்கையோடும் பெரும் மனவேதனையோடும் இதை உங்களுக்கு எழுதுகிறேன்.நான் இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்துள்ளேன் என்ற காரணத்தினால் லக்னோ பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள விகாஸ் மிஸ்ரா என்ற அதிகாரி என்னை தரக்குறைவாக பேசுகிறார். என்னிடம் இழிவாகவும் சத்தமாக அடுத்தவர்களுக்கு கேட்கும் விதத்தில் என்னிடம் விவாதிக்கிறார்.இதுபோன்ற அவமானத்தை எங்கும் நான் அடைந்ததில்லை”.
“பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்ற மனிதர்கள் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.என்னுடையது மட்டுமின்றி என் கனவரது பாஸ்போர்ட்டையும் அந்த அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.எங்கள் மீதுள்ள வெறுப்புணர்ச்சியாலேயே அந்த அதிகாரி இப்படி நடந்துள்ளார். அவரது நடத்தையால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.என்னுடைய 12 வருட திருமண வாழ்வில் என் கனவரிடம் எந்த அவமதிப்பையும் அடைந்ததில்லை. பெயரை தேர்ந்தெடுப்பது என் தனிப்பட்ட உரிமை.இது எங்கள் குடும்ப விஷயம். ஆனால் மற்ற்றொரு அதிகாரி நீங்கள் முன்னரே என்னிடம் வந்திருந்தால் இப்பிரச்சனையே எழுந்திருக்காது.உங்கள் மனைவியின் ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளது என என் கனவரிடம் கூறியுள்ளார்". நன்றி https://www.news18.com/news/india/passport-officer-rejects-hindu-muslim-couples-application-asks-man-to-convert-to-hinduism-1784739.html
\r\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.
Leave Comments