இந்தி திணிப்பை ஏற்க முடியாது

/files/detail1.png

இந்தி திணிப்பை ஏற்க முடியாது

  • 0
  • 0

 

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்ளவிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு, மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையில் இந்தி திணிப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், மாணவர்களுக்குத் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் அரசியலைப்பில் அங்கீகரிக்கப்பட்ட பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கையைத் தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என்று அந்த குழு தெரிவித்துள்ளது. மூன்றாவது மொழியாக இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒன்றும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்கவேண்டும் என்றும் கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது. இதனைச் செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. இந்த திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தினால் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இந்தி திணிப்பு உருவாகிறது. இந்தி திணிப்புக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் சமூக வலைத்தளங்களில் இந்தி மொழிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகியுள்ளன.

alt text

மேலும், இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, "மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது. இது வன்மையாகக் கண்டிக்கக் கூடியது. தாய்மொழி தான் அவசியம். அதைச் சீர்குலைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave Comments

Comments (0)