மலையக மக்களின் கோரிக்கை இந்தியாவிடம்

/files/detail1.png

மலையக மக்களின் கோரிக்கை இந்தியாவிடம்

  • 0
  • 0

இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வழி செய்ய வேண்டும் என மலையக இளைஞர் அமைப்பினால் இந்திய துாதரகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என பல நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 700 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலையக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மலையக இளைஞர் அமைப்பினரால் இலங்கையில் உள்ள இந்தியத் துாதரகத்திடம் மலையக மக்களுக்கான உரிமையைப்பெற்றுத்தரும் படி பல கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய கூட்டு உடன்படிக்கையில் மேலும் சில புதிய விடையங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். 

தொழிலாளர்களுக்கு வருடத்தில் 300 நாட்கள் வேலை உறுதி செய்யப்படுவதோடு, ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி என்பன அடிப்படை சம்பளத்தில் இருந்து ஒதுக்காமல் மாதத்தின் மொத்த சம்பளத்திற்கே ஒதுக்கப்பட வேண்டும். 

மேலும் வேலைத்தளங்களில் வைத்து தொழிலாளர்கள் சுகவீனமுற்றால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதோடு பெண் தொழிலாளர்களின் நலன் கருதி தொழில்சார் உரிமைகள் பேணப்பட வேண்டும். 

இயற்கை இடர்கள் ஏற்படும் போது தொழில்பாதுகாப்பும் நலன்களும், சம்பளமும் விடுமுறையும் கவனத்தில்கொள்ளப்படுவதோடு தொழிலாளர்கள் காப்புறுதித்திட்டத்திற்கு உள்வாங்கப்பட வேண்டும்.
மேலும் கழிப்பறைகள் முதலுதவிப்பெட்டிகள் உரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும். 

சர்வதேச தேயிலைத்தினம் கம்பனிகளின் சந்தைப்படுத்தலுக்கான தினமாக மட்டுமல்லாது தொழிலாளர் நலன் உரிமைகள் விழிப்பு நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
 

Leave Comments

Comments (0)