வரலாற்றில் மாபெரும் வங்கிக்கொள்ளை-  ரவிக்குமார்

/files/detail1.png

வரலாற்றில் மாபெரும் வங்கிக்கொள்ளை-  ரவிக்குமார்

  • 0
  • 0

 

பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிசெய்ய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கும் பாஜக அரசு இப்போது ரிசர்வ் வங்கியைச் சூறையாடத் தொடங்கியுள்ளது என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

”ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள கையிருப்பிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை அரசாங்கத்துக்கு அளிப்பதாக செய்திருக்கும் அறிவிப்பு பொருளாதாரம் தெரிந்தவர்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரு ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது 3.6 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து அரசாங்கத்துக்குக் கொடுக்குமாறு பாஜக அரசு நெருக்கடி தந்தது. ‘அப்படிச் செய்தால் ரிசர்வ் வங்கியின் தற்போதைய AAA என்ற ‘ரேட்டிங்’ குறைந்துவிடும். அதனால் இந்தியா பெறும் கடன்களின் மதிப்பு அதிகமாகி சுமை ஏறிவிடும். அது இந்தியப் பொருளாதாரத்துக்குக் கேடாக முடியும்’ எனக் கூறி அவர் மறுத்துவிட்டார். அவருக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் கவர்னராக வந்த உர்ஜித் படேலும் மோடி அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிய மறுத்து இரண்டு ஆண்டுகளிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

பொருளாதார நிபுணர்கள் ரிசர்வ் வங்கி கவர்னர்களாக இருப்பதால் விரும்பியவாறு ரிசர்வ் வங்கியின் தொகையைச் சூறையாட முடியவில்லை என்பதை உணர்ந்த பாஜக அரசு பொருளாதாரக் கல்விப் பின்புலம் இல்லாதவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ரிசர்வ் வங்கியின் போர்டு உறுப்பினர்களாகவும் நியமித்தது. அதன் விளைவுதான் இந்த முடிவு.

பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிசெய்ய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றுக்கொண்டிருக்கும் பாஜக அரசு இப்போது ரிசர்வ் வங்கியைச் சூறையாடத் தொடங்கியுள்ளது. பணமதிப்பு அழிப்பு ( demonetisation) நடவடிக்கைமூலம் நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்குக் ( slowdown ) கொண்டுவந்து நிறுத்தியுள்ள பாஜக அரசு ரிசர்வ் வங்கியைச் சூறையாடுவதன்மூலம் திவால் நிலையை நோக்கித் தள்ளுகிறது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave Comments

Comments (0)