இலங்கையில் மாபெரும் போராட்டம் 

/files/detail1.png

இலங்கையில் மாபெரும் போராட்டம் 

  • 0
  • 0

 

இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாபெரும்  நாடு தழுவிய  போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிற்துறையான தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது ஒருநாள் அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருட்களுக்கான விலையேற்றம் ஆகியவற்றினைக் கருத்திற்கொண்டு, தமக்கான ஒருநாள் அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்க வேண்டுமென, தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகள் சம்மேளனத்துக்கும் இடையில் மேற்படி சம்பள விவகாரம் தொடர்பில், மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

இந்நிலையில், பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 1000ற்கும் மேற்பட்ட   தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, பொகவந்தலாவ கெம்பியன் தோட்டத்திலிருந்து எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Leave Comments

Comments (0)