வேட்பாளராக களம் இறங்கப்போகும் கோட்டபாய ராஜபக்சே!

/files/detail1.png

வேட்பாளராக களம் இறங்கப்போகும் கோட்டபாய ராஜபக்சே!

  • 0
  • 0

இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், மிலேச்சத்தனமாக இடம்பெற்றிருந்தன என்று ஐநா விசாரணைக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த குற்றங்கள் இடம்பெற்ற இறுதிப்போர் காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோட்டபாய ராஜபக்சே மீது எந்த சட்ட நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. மேற்கூறிய குற்றங்கள் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுவதற்கு நிர்வாக ரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் அவரும் போர்க்குற்றவாளியாக தமிழர் தரப்பால் இனங்கானப்படுகின்றார்.

இவ்வாறான ஓர் நிலையில்,மொட்டுக்கட்சிக்காரர்கள் தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க கோட்டபாய ராஜபக்சே தயாராகி வருவதாக தகவல்  வெளியாகியுள்ளது. பொதுத்தேர்தல்கள் என்ற ஒழுங்கில் இந்த ஆண்டு இலங்கைக்கு தேர்தல் ஆண்டாக அமையவுள்ளது. மேலும் இன்னும்  பத்து மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில்  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவே கோட்டபாய ராஜபக்சே தயாராகி வருவதாகக் கூறப்படுகின்றது.

Leave Comments

Comments (0)