கொழுப்பெனும் நண்பன் 2

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 2

  • 1
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

 

அமெரிக்க  நாட்டை சேர்ந்த ஒரு மனிதனின் சுயநலமிக்க மருத்துவ ஆய்வு .. எத்தனை பேரை இதய நோயாளிகளாக மாற்றியது என்று கூறினால்..

ஹிட்லரை விட கொடுங்கோலன் இவர் தான் என்று கூறிவிடுவீர்கள்

நான் கூறும் அந்த மனிதர்

அமெரிக்காவைச் சேர்ந்த ஏன்சல் கீஸ் என்பவர் தான். 

இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம், இவர் உணவுத்துறையில் பங்களித்து அமெரிக்க மிலிட்டரி ஜவான்கள் உண்ணத்தேவையான குறை கொழுப்பு நிறை மாவு உணவு ஒன்றை வடிவமைத்தார் அதற்கு

 K-RATION என்று பெயரிடப்பட்டது.

ஒரு சாஸ், ஒரு சாக்லேட், ஒரு பிஸ்கட், ஒரு கேண்டி என்று மொத்தம் 700 கிராம் அளவு கொண்ட அந்த உணவு அனைத்து போர் வீரர்களுக்கும் கொடுக்கப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றதாம். 

உடனே அது தான் உலகின் அனைத்து மக்களுக்குமான சிறந்த உணவு என்று முடிவெடுத்துவிட்டார் ஆன்சல் கீஸ். 

தனது "குறை கொழுப்பு நிறை மாவு" உணவு முறையை பிரபலப்படுத்த வேண்டுமெனில் ஒரு ஆய்வு நடத்தியாக வேண்டும். 

ஆய்வில் உறுதி செய்து விட்டால் உலகம் முழுவதும் அதை நம்பி விடும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. 

நிற்க 

நாள் செப்டம்பர் 24, 1955 

அமெரிக்க வெள்ளை மாளிகை 

இரண்டாம் உலகப் போரை நேச நாடுகள் வெல்ல காரணமாய் இருந்த அமெரிக்காவின் அதிபர் எய்சன்ஹோவர் கோல்ப் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது விழுந்து சரிகிறார். 

 

காரணம் : இதய ரத்தக்குழாய் அடைப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறுகிறார்.

ஜனாதிபதியின் மருத்துவ ஆலோசகரான Dr.ஒயிட் என்பவர் அதிபர் அதிக கொழுப்புணவு உண்டது தான் மாரடைப்புக்கு காரணம் என்று முடிவு செய்து அவரது டயட்டை குறை கொழுப்பு நிறை மாவு உணவு முறைக்கு மாற்றுகிறார்.

மேலும், கொழுப்பு என்பது தீண்டத்தகாத பொருள் எனும் கருத்து அமெரிக்க மக்கள் மத்தியில் வேகமாக காட்டுத்தீ போல பரவியது.

சரி.. குறை கொழுப்பு உணவு முறைக்கு மாறிய ஜனாதிபதி நன்றாக இருந்தாரா என்பதை ஊடகங்கள் மறைத்து விட்டன. 

உண்மையில் எய்சன்ஹோவருக்கு 1955 இல் மாரடைப்பு வந்த போது அவரது ரத்த கொலஸ்ட்ரால் 165 தான். இந்த டயட்டுக்கு மாறிய பின் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி 259 க்கு வந்தது. 

மேலும், 1960களில் இதயத்துக்கு உகந்தது என்று சொல்லப்பட்ட குறை கொழுப்பு உணவு முறையை உண்ணும் போது தான் 14 முறை இதய ரத்தக்குழாய் அடைப்பும் 7 முறை இதய செயல்பாட்டு நிறுத்தமும் அடைந்து சிகிச்சை மேற்கொண்டார். 

அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் கொழுப்பை குறைத்ததால் ஏற்படவில்லை.ஆனால் அது மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

இந்த சமயத்தில் தான் ஆன்சல் கீஸ் " seven countries study" என்ற ஆய்வை மக்கள் முன் வைக்கிறார்.

அதில் தான் ஆய்வு செய்த ஏழு நாடுகளில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகம் இருப்போருக்கு இதய நோய்கள் அதிகம் இருப்பதாக முடிவை வெளியிட்டார்.

ஆனால் உண்மை என்ன?

கீஸ் ஆய்வு செய்தது 22 நாடுகளை .

22 நாடுகளில் ஏழு நாடுகளில் மட்டுமே அவருக்கு சாதகமான விடை கிடைத்தது. மீதம் 15 நாடுகளில் கொலஸ்ட்ராலுக்கும் இதய வியாதிக்கும் தலைகீழ் சம்பந்தமே இருந்தது. 

ஆனால் சாமர்த்தியமாக அந்த நாடுகளை கழற்றி விட்டு தனது ஆய்வை பிரபலப்படுத்தி மக்களை நம்பவும் வைத்து விட்டார். 

பிரபல டைம் இதழின் முதல் பக்கத்திலும் இடம் பெற்றார். 

அவர் சொன்ன குறை கொழுப்பு(low fat ) டயட் தான் உலகத்தின் வேதவாக்கானது. 

அவர் கூறியதை அமெரிக்க உணவுத்துறையும் ஏற்று மக்களுக்கு அந்த கருத்தை வலியத் திணித்தது. 

முட்டை , ஸ்டீக், பேகன், பட்டர் போன்றவற்றை திண்று பழகிய அமெரிக்கர்கள்  , கார்ன், கனோலா, கெல்லாக்ஸ், ஓட்ஸ் , கோதுமை என்று மாறினர்.

அதன் விளைவை தற்போது அமெரிக்கர்கள் தற்போது அறுவடை செய்கின்றனர். 

ஹார்வர்டு பல்கலைகழகம் 1960களில் செய்த ஆய்வில் அமெரிக்கர்களிடயே கொழுப்பை அதிகம் உண்ணும் போது 

13 சதவிகிதம் உடல் பருமனும்1 சதவிகிதம் நீரிழிவும் இருந்தது

தற்போது , கொழுப்பை தவிர்த்து உணவு உண்ணும் சூழலில் அமெரிக்கர்கள் இடையே 45 சதவிகிதம் உடல் பருமனும் 8 சதவிகிதம் நீரிழிவும் காணப்படுவதாக கூறுகிறது. 

கொழுப்பு கெட்டதில்லை நல்லது தான் என்பதை உணரவே 50 வருடங்கள் ஆக்கிவிட்டன. 

1984 இல் கொழுப்பு கெட்டது என்று தலையங்கம் வெளியிட்ட டைம் இதழ் மீண்டும் 2014 ஆம் வருடம் கொழுப்பு நல்லது தான் என்று தலையங்கத்தில் வெளியிட்டு தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டது.

இதிலிருந்து நாம் வர வேண்டிய முடிவு 

கொழுப்பு கெட்டதல்ல

கொலஸ்ட்ரால் நன்மை தரக்கூடியது

சுயநலமிக்க சிலரது பேராசையால் கொழுப்பின் மீது தவறான முத்திரை குத்தப்பட்டுவிட்டது என்பது மட்டும் திண்ணம். 

எல்லாம் சரி.

ஹார்ட் அட்டாக் வர உண்மையான காரணம் என்ன??

தொடர்வோம்

முந்தய தொடரினை படிக்க http://karuppu.thamizhstudio.com/news/fat-is-a-good-friend-part-1

\r\n

Leave Comments

Comments (0)