இலங்கையின் தேசியக் கொடி கம்பத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்கள்

/files/detail1.png

இலங்கையின் தேசியக் கொடி கம்பத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்கள்

  • 0
  • 0

இலங்கையின் தேசியக் கொடியை இறக்கி விட்டு, கறுப்புக்கொடியை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றியுள்ளனர்.

இலங்கையின் சுதந்திரதினமான இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி கொடி ஏற்றப்பட்டுள்ளது. அத்தோடு பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. இலங்கையின் 71ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டுசுதந்திர தின நிகழ்வுகள்நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.

alt text

ஆனால் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் கரிநாளாகப் பிரகடனம் படுத்தி கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

alt text

இதற்கமைய சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்திய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கரிநாள் பதாகைகளையும் எமக்கு எப்போது சுதந்திர தினம் எனக் குறிப்பிட்டுள்ள கறுப்பு கொடிகளையும் பல்கலைக்கழகத்தைச் சூழ பறக்கவிடப்பட்டுள்ளனர்.

Leave Comments

Comments (0)