ஈழ எழுத்தாளருக்கு இந்தியாவின் சாகித்திய அகடாமி விருது

/files/detail1.png

ஈழ எழுத்தாளருக்கு இந்தியாவின் சாகித்திய அகடாமி விருது

  • 0
  • 0

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஐயாத்துறை சாந்தனுக்கு இந்திய அரசு அவரின் இலக்கிய பணிக்காக சாகித்திய அகடாமி விருது வழங்கி மதிப்பளித்துள்ளது.

ஐயாத்துறை சாந்தன், இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்தவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரையில் 27 நுால்கள் எழுதியுள்ளார்.  அத்துடன் ஆங்கில நுால்களை மொழிபெயர்த்து உலக எழுத்தாளர்களை தமிழில் அறிமுகப்படுத்திய பணியையும் அவர் செய்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் யாழ். இந்திய துணைத்துாதர்  அ. நடராஜன் தலைமையில் டெல்லியில் நடந்த சாகித்திய அகடாமி விருது வழங்கும் நிகழ்வில் ஐயாத்துறை சாந்தனுக்கு சாகித்திய அகடாமி விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Leave Comments

Comments (0)