முகாம்களை பலப்படுத்தும் அரச படையினர்

/files/detail1.png

முகாம்களை பலப்படுத்தும் அரச படையினர்

  • 0
  • 0

தமிழர் தாயகப்பகுதிகளில்  அரச படையினர்  நில ஆக்கிரமிப்புக்களைச் செய்து வரும் நிலையில், புத்த மதத் தலைவர்கள்   படையினரின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களை  அமைத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழ் குடியிருப்புக்கள் சிங்கள குடியேற்றங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.

 மேலும் கடல்சார் மக்களின் நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ள  கடற்படையினர், அப்பகுதி மக்களை காட்டுப்பகுதிகளில் குடியமர்த்த முனைந்துள்ளது. எனவே இவ்வாறான படையினரின் நடவடிக்கைகளால் மக்கள் தமக்குச்சொந்தமான தொழிலை செய்ய முடியாது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

alt text

இந்நிலையில் தமிழர் நிலங்களில் இருந்து படையினரை வெளியேற்றக்கோரி  ஆங்காங்கு  ஜனநாயக வழியில் நில  மீட்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கேப்பாப்புலவில் தொடர்ந்து மழை, வெயில் என்றில்லாமல் குழந்தைகள் பெரியவர்கள் என கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நில மீட்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.  இதில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மிகுதி மக்களின் நிலங்களையும் விடுவிக்கக்கோரி போராட்டத்தை மக்கள் தொடர்கின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழ் அரசியல்  கட்சித்தலைவர்கள்  கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்தப்போராட்டைத்தை  இன்று அவுஷ்ரேலியா பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேர் வந்து அவர்களின் நிலமை, கோரிக்கைகளைக் கேட்டடறிந்துள்ளது.

alt text

மக்களின் இந்த ஜனநாயகப்போராட்டத்திற்கு எதிராக காவல்துறையினர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளனர். மேலும் கேப்பாப்புலவில் மக்களின் காணிகளில் அமைந்துள்ள தமது படை முகாமை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

Leave Comments

Comments (0)