கேப்பாப்புலவு மக்களின் வேண்டுகோள்....

/files/detail1.png

கேப்பாப்புலவு மக்களின் வேண்டுகோள்....

  • 0
  • 0


கேப்பாப்புலவு நிலமீட்புப் போராட்டத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஈடுட்டு வரும் மக்கள், இலங்கையின் சுதந்திரத்தினத்தை துக்க தினமாக அறிவித்து போராட்டத்தைத்தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

வரும் 4ம் திகதி திங்கட்கிழமை இலங்கையின் சுதந்திரதினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்பாப்புலவு மக்கள், “எமது நாட்டில் உள்ள எமது காணிக்குள் நாம்போகமுடியாத நிலையில் உள்ளோம்.எனவே இந்த சுதந்திர தினம் எமக்கு துக்கதினம். அந்நாளில் நாம் எமது போராட்ட இடத்தில் அமைதிவழியில் போராட்டம் செய்யப்போகின்றோம். அதற்கு எமது பகுதிகளில் உள்ள அனைத்து இளைஞர்கள் நலன்விரும்பிகள் என சகலரும் வந்து கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave Comments

Comments (0)