யோகி ஆதித்யநாத் மீதான புகாரை வெளிகொண்டுவந்ததற்காக நான்கு பத்திரிகையாளர்கள் கைது

/files/detail1.png

யோகி ஆதித்யநாத் மீதான புகாரை வெளிகொண்டுவந்ததற்காக நான்கு பத்திரிகையாளர்கள் கைது

  • 0
  • 0

 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதான புகாரை வெளிகொண்டுவந்ததற்காக நான்கு பத்திரிகையாளர்களை உ.பி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தி வயர் இந்தி இணையதளத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா. இவர் தனது முகநூல் பக்கத்தில், தனக்கும் ஆதித்யநாத்துக்கும் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்பு இருப்பதாகக் கூறிய பெண் ஒருவரின் பேட்டியைப்  பகிர்ந்திருந்தார். இதனால் அவரை உ..பி காவல்துறை கைது செய்துள்ளது.

பிரசாந்தின் கைது குறித்து கேள்வி எழுப்பிய தி வயர் இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனையும் காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும், ஆதித்யநாத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறிய பெண்ணின் கருத்து குறித்து ஊடக விவாதம் நடத்திய ‘நேசன் லைவ்’ என்ற உள்ளூர் தொலைக்காட்சியைச் சேர்ந்த இஷிதா சுங்கும், அதனுடைய ஆசிரியர் அனுஜ் சுக்லாவையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave Comments

Comments (0)