ஜெர்மனியில் முன்னாள் போராளி கைது

/files/detail1.png

ஜெர்மனியில் முன்னாள் போராளி கைது

  • 0
  • 0

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்   லக் ஷ்மன்  கதிர்காமரின் கொலை சம்பவத்துடன் தொடர்பிருந்ததாகக்  கூறி ஜெர்மனியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதுடைய ஜி. நவீதன் என்பவரே ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் வைத்து கைது  செய்யப்பட்டுள்ளதாக The Associated press தகவல் வெளியிட்டுள்ளது. 

ஜி. நவீதன், லக் ஷ்மன்  கதிகாமரை கொலைசெய்த குழுவுடன் தொடர்புடையவர் என்பதோடு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ்தேவானந்தாவை கொலைசெய்ய முயன்றதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே ஜி. நவீதன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த கைது குறித்த எந்த தகவலும் தமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்பு –7 இல் உள்ள தனது இல்லத்தில் வைத்து லக் ஷ்மன் கதிர்காமர் சுட்டுக்கொலை செய்யப்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave Comments

Comments (0)