காஷ்மீரையும் கேரளத்தையும் இணைத்த கால்பந்து போட்டி!

/files/detail1.png

காஷ்மீரையும் கேரளத்தையும் இணைத்த கால்பந்து போட்டி!

  • 0
  • 0

- V. கோபி

காஷ்மீர் என்றாலே தீவிரவாத தாக்குதலும், ராணுவ எதிர் தாக்குதலும், கல் எறி சம்பவங்களும் போன்ற செய்திகளை தான் நாம் தினமும் கேட்டிருப்போம். ஆனால் சென்ற புதன்கிழமை, ஆரோக்கியமான நல்ல போட்டியும், ரசிகர்களின் ஆராவாரமும், வீரர்களுக்கு இடையேயான பிணைப்பும் காணக் கிடைத்தது. 

இந்தியன் லீக் கால்பந்து தொடருக்கான போட்டியில் காஷ்மீரைச் சேர்ந்த ரியல் காஷ்மீர் கிளப்பும் (RKFC) கேரளாவைச் சேர்ந்த கோகுலம் கேரளா (GKFC) கிளப்பும் விளையாடியது. இந்தப் போட்டி காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடும் பணிப்பொழிவிற்கு நடுவே ஜீரோ டிகிரி செல்சியஸில் நடைபெற்றது.  

பணிப் பொழியும் போது கால்பந்து விளையாடுவது நமக்கு ஐரோப்பாவை ஞாபகப் படுத்தினாலும், இடைஇடையே தூறும் மழைக்கு மத்தியில் ஆட்டம் சரியாக மதியம் இரண்டு மணிக்கு தொடங்கியது. மைதானத்தைச் சுற்றியும் பணி மூடிய மலைகளும், குளிரில் நடுங்கிய படியே வீரர்களை உற்சாகப்படுத்தும் ரசிகர்களும் என ஆட்டம் களைக் கட்டத் தொடங்கியது.

ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ரியல் காஷ்மீர் அணியைச் சேர்ந்த க்னோரே கிரிசோ அற்புதமான ஒரு கோல் அடித்தார். கேரள வீரர்கள் முதல் முறையாக குளிருக்கு நடுவே விளையாடியதால் அவர்களால் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இறுதியில், காஷ்மீர் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. “மழைக்கும் பணிக்கும் நடுவே வந்து எங்கள் அணிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் அனைவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். எங்கள் அணியை எல்லாரும் பணிச் சிறுத்தை என்று கூறுவார்கள். பணியும் மழையும் பெய்யும் போது சிறுத்தை போன்ற எங்கள் வீர்ர்கள் எப்படி வெற்றி பெறாமல் இருப்பார்கள். இது அற்புதமான வெற்றி” என சந்தோஷமாக கூறுகிறார்கள் காஷ்மீர் அணியின் கூட்டு உரிமையாளர்களான ஷமிம் மிராஜ் மற்றும் சந்தீப் சட்டூ. 

நான்கு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ரியல் காஷ்மீர் அணி, இந்தியன் லீக் கால்பந்து தொடருக்கு தேர்வுப் பெற்ற முதல் காஷ்மிர் அணி என்ற பெருமையை 2018-ம் ஆண்டு பெற்றது. அன்றிலிருந்து நாட்டிலுள்ள மக்களின் மன்ங்களை கொள்ளை கொண்டு வருகிறது காஷ்மீர் அணி. 

புதன்கிழமை பெற்ற வெற்றியின் மூலம் முதலிடத்தில் இருந்த சென்னை அணியை பின்னுக்கு தள்ளி 32 புள்ளியுடம் முதல் இடம் பிடித்தது காஷ்மீர் அணி. அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தியன் லீக் தொடர் இந்த வருடம் மார்ச் மாதம் முடிவடையவுள்ளது. “இது நம்ப முடியாத வெற்றி” என ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் நிதி அமைச்சர் ஹசீப் த்ரூபு கூறியுள்ளார். 

“நாங்கள் வியர்வையில் நனைந்த படி விளையாட விரும்புவோம். ஆனால் பணிபொழிவிற்கு நடுவே விளையாடியது எங்களுக்கு கிடைத்த அரிதான அணுபவம்” என கோகுலம் கேரள அணியின் வீரர்கள் கூறினர். பல ரசிகர்கள் குளிரில் நடுங்கிய படியே போட்டியை பார்த்தனர். காஷ்மீர் மக்கள் எந்தளவிற்கு விளையாட்டை நேசிக்கிறார்கள் என்பதை இது தெரியப்படுத்தியது.

மிராஜ் கூறுகையில், “இப்படியொரு கடுமையான வானிலையிலும் அற்புதமாக விளையாடிய கோகுலம் கேரள அணிக்கு நாங்கள் நன்றியை கூறிக் கொள்கிறோம். இதில் முக்கியமான விஷயம், கடைசியில் கால்பந்து விளையாடு தான் வெற்றி பெற்றது என்பதை இரு அணிகளும் உறுதிபடுத்தின”. 
 
 

Leave Comments

Comments (0)