மாற்று பாலினத்தவருக்கான தனி கழிவறை திறப்பு 

மாற்று பாலினத்தவருக்கான தனி கழிவறை திறப்பு 

  • 1
  • 0

 

மாற்று  பாலினத்தவருக்கான முதல் கழிவறை திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் மாநகராட்சி பொது கழிவறை அருகே இன்று திறக்கப்பட்டது.

மாற்று  பாலினத்தவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் அடிப்படை தேவையிலிருந்து துவங்குகிறது. இதிலிருந்து விடுபட தனி கழிவறை அமைக்க வலியுறுத்தி திருநங்கையர் போராடி வருகின்றனர்.

ரோட்ராக்ட் மாவட்டம் 3000 2018-19 திட்டத்தின் மூலம் முதன்முதலாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இந்த கழிவறை அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

ரோட்டரி க்ளப் ஆப் குயின் சிட்டி, ரோட்டரி க்ளப் ஆப் திருப்பூர் மற்றும் ரோட்ராக்ட் மாவட்டம் 3000 சார்பில் இந்த முதற்கட்ட முயற்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இந்த முன்னோடி செயல்பாட்டுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்ததோடு இதனை மேலும் விரிவாக்க பரிந்துரைத்துள்ளனர்.

alt text

Leave Comments

Comments (0)