மற்றொரு தொகுதி அகதிகள் நாடு திரும்புகின்றனர்

/files/detail1.png

மற்றொரு தொகுதி அகதிகள் நாடு திரும்புகின்றனர்

  • 0
  • 0

 

தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து வரும் 14 ம் திகதி 16 குடும்பங்கள் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த 16 குடும்பங்களில் 15 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர் என்று புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு திரும்பும் அகதிகள், ஐநாவின் அகதிகளுக்கான  யூ.என்.எச்.ஆர்.சி. அமைப்பின் உதவியுடன் உகந்த சட்டரீதியான வழிமுறைகளின் ஊடாக மட்டுமே இலங்கை திரும்பமுடியும்  என்றும்  இலங்கைப் போரின் விளைவாக இடம்பெயரும்வரை அவர்கள் வாழ்ந்த வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாவட்டங்களிலேயே அவர்கள் குடியமர்த்தப்படுவர் என்றும் வி.சிவஞானசோதி கூறியுள்ளார்.

மேலும் அகதிகள்  நாட்டுக்கு வந்த பின் அவர்களுக்கு  உடனடித்துவையை நிறைவு செய்வதற்காக உதவித்தொகையும் வழங்கப்படும் எனக்குறிப்பிட்ட வி.சிவஞானசோதி , வீடுகள் கையளிக்கப்படும்போது இந்த அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

2009ம் ஆண்டுக்கும் பின் தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் தங்கியிருந்த 11,020 பேர்   இதுவரையில் இலங்கை திரும்பியிருக்கிறார்கள். மேலும் 3,815 அகதிகள் யூ.என்.எச்.ஆர்.சி.யின் அனுசரணையுடன் நாடுதிரும்ப விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒன்றில் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் குடும்பமொன்றுக்கு 100,000 ரூபா தொடக்கம் 150,000 ரூபா வரை வழங்கப்படுகின்ற வாழ்வாதார ஆதரவுத்திட்டத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கும் அகதிகள் உரித்துடையவர்கள். ஆனால், நாடுதிரும்புகின்ற சகல அகதிகளுக்கும் வாழ்வாதார ஆதரவு வழங்கப்படமாட்டாது என்றும் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

 

Leave Comments

Comments (0)